அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள உட்கியாவிக் (Utqiagvik), முன்னாள் பெயர் பரோ (Barrow) என அழைக்கப்படும் நகரில், நவம்பர் 19ஆம் தகிதி சூரியன் அஸ்தமனமாகி, ஜனவரி 22 ஆம் திகதி வரை – சுமார் 60 நாட்கள் வரை – மீண்டும் உதிக்காது.
இதற்கு காரணம், பூமி அதன் 23-டிகிரி சாய்வில் சுழல்வதால் ஏற்படும் பாதிப்பு. இந்த சாய்வின் காரணமாக, குளிர்காலத்தில் பூமியின் வடக்கு மற்றும் தென் துருவப் பகுதிகளில் சூரியன் வட்டத்தின் விளிம்பு அடிவானத்திற்கு மேல் வருவதில்லை. இதை “துருவ இரவு” (Polar Night) என அழைக்கிறார்கள்.
சூரியன் 60 நாட்களுக்கும் காட்சியளிக்கவில்லை என்றாலும் இருளில் மூழ்கிய நிலை இருக்காது. சூரியன் உதிப்பதற்கு முன்பும், அஸ்தமனத்திற்கு முன்பும் வானம் எப்படி இருக்குமோ அதே சூழல் பகல் நேரத்தில் இருக்கும். மங்கலான வெளிச்சத்தோடு நகரம் காட்சியளிக்கும்.