தென்னாபிரிக்காவில் உள்ள பாபாப் மரம் 2,000 ஆண்டுகளாக வளர்ந்து நிலைத்திருக்கும் தன்மை கொண்டது. இந்த மரம்”வாழ்க்கை மரம்” என்று அழைக்கப்படுகிறது. இது ஆபிரிக்காவின் வறண்ட சவன்னா பகுதியில் செழித்து வளரக்கூடியது. மழைக்காலத்தில், பாபாப் மரம் தன்னுடைய தண்டுகளில் ஆயிரக்கணக்கான லீற்றர் தண்ணீரை சேமித்து வைக்கிறது. இது வறட்சிக் காலங்களில் மரம் உதிராமல் இருக்க உதவுகிறது.
இந்த மரம் 30 மீற்றர் உயரம் வரை வளரக்கூடியது மற்றும் 5,000 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியது. பாபாப் மரங்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் தண்ணீரை வழங்கக்கூடியவை. அதன் பழங்கள் ஊட்டச்சத்துகள் மற்றும் ஒக்சிசனேற்றங்கள் நிறைந்தவை. அதேசமயம், இப் பழம் கிளையில் இயற்கையாக காய்ந்து 3 ஆண்டுகள் வரை நன்றாக இருக்கக்கூடியது.
மரத்தின் பட்டையிலிருந்து கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இலைகள் கால்நடைகளுக்கு உணவாகவும் அதன் எண்ணெய் அழகுசாதனப் பொருட்களாகவும் பயன்படுகின்றன. இதன் தனித்துவமான பண்புகளுக்காக அதன் தேவை அதிகரித்து வருகிறது.