மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் நீங்கள் இந்துவா, என்ன வகுப்பு, சான்றிதழ் எங்கே என கேட்டு என்னை மனதளவில் காயப்படுத்தி விட்டதாக நடிகை நமிதா தெரிவித்துள்ளார். அமைச்சர் சேகர் பாபு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை நமிதா கோரிக்கை வைத்துள்ளார்.
விஜய்காந்த் நடித்த எங்கள் அண்ணா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நமிதா, தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இவர் சினிமாவில் அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே இளைஞர்களின் மனதில் ஓரு இடத்தை பிடித்து விட்டார்.
நடிகை நமிதா: விஜய், அஜித், சரத் குமார், சத்தியராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த நமிதா, உடல் எடை அதிகரித்ததைத் தொடர்ந்து சின்னத்திரையில் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இதைத்தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தத்தைத் தொடர்ந்து வெளியில் தலைகாட்டாமல் இருந்தார். இதைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடிகிறது. இதுமட்டுமில்லாமல், அரசியலில் ஆர்வம் கொண்ட நமிதா, பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். என்ன மதம்: இந்நிலையில் நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கிருஷ்ண ஜெயந்திக்காக நான் அனைத்து கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து இருக்கிறேன்.அது போல இன்று நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றேன். அங்கிருந்த அதிகாரி ஒருவர் என்னிடம் நீங்கள் இந்துவா, என்ன சாதி என்று கேட்டார். அதற்கான சான்றிதழ் இருக்கா என்று கேட்டு என்னையும் என் கணவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார்.
நமிதா வேதனை: நான் ஒரு இந்து என்பது அனைவருக்கும் தெரியும், என் திருமணம் திருப்பதியில் நடந்தது. என் குழந்தைக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ், என கிருஷ்ணனின் பெயர் தான் வைத்துள்ளேன். கோவில்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பது என்பது வருத்தமாக உள்ளது. நான் பல கோவில்களுக்கு சென்று இருக்கிறேன், இந்தியாவில் எந்த கோவிலிலும் இது போன்று தன்னிடம் இந்த கேள்வியை கேட்டது இல்லை.