63
பூமியின் ஒருநாள் என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தது இல்லை. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் ஒருநாள் என்பது 18 மணி நேரமாகத்தான் இருந்திருக்கிறது. அப்போது பூமிக்கு அருகில் நிலா இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பூமியைவிட்டு நிலா நகர்ந்துகொண்டே இருக்கிறது.
அதனால் பூமியின் வேகம் குறைந்துகொண்டே இருக்கிறது. ஆண்டுக்கு 3.8 செ.மீ. தொலைவுக்குப் பூமியை விட்டு நிலா விலகிச் சென்றுகொண்டே இருந்தால், 20 கோடி ஆண்டுகளில் பூமியின் ஒருநாள் என்பது 25 மணி நேரமாக மாறியிருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.