நடிகை ராஷ்மிகா மந்தனா என்றால் அவரது ரசிகர்கள் தொடங்கி தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர்கள் வரை பலரும் கூறுவது, நேஷ்னல் கிரஷ் என்பதுதான். இவர் நடிக்கும் படங்களில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் படம் எப்படியும் ஹிட் அடித்து விடுகின்றது. ஆனால் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு தன்னால் முயன்ற அளவிற்கு தனது நடிப்பின் மூலம் நியாயம் செய்து விடுகின்றார்.
சமீபத்தில் இவர் இந்தி படத்தில் நடிக்க ஆர்வம் அதிகரித்து அனிமல் படத்தில் நடித்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியான காட்சிகளில் மட்டும் இல்லாமல், படுக்கையறை காட்சிகளிலும் பாலிவுட் உலகின் டாப் கதாநாயகிகளே ஆச்சரியப்படும் அளவிற்கு கவர்ச்சியாக நடித்திருந்தார். இதனால் இவரது கால்ஷீட்டுக்காக பாலிவுட் உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அவரை ஒரே நேரத்தில் அணுகியதால் இன்றைக்கு பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக மாறிவிட்டார்.
ராஷ்மிகா மந்தனா தற்போது பல படங்களில் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தாலும், அவரது நடிப்பில் வெளியாகவுள்ள புஷ்பா 2 படத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் இயக்குநர் சுகுமாறனுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தள்ளிப்போ ய்கொண்டே உள்ளது என கூறப்படுகின்றது.
28 வயது நிரம்பிய ராஷ்மிகா மந்தனா தனது திரை வாழ்க்கை தொடங்கி சில ஆண்டுகளிலேயே இந்தியாவில் அதிகப்படியானோரின் அன்பைப் பெற்ற நடிகையாக மாறினார். குறிப்பாக, அவரை நேஷ்னல் கிரஷ் என புகழும் அளவிற்கு உச்சத்தைத் தொட்டார். இதுமட்டும் இல்லாமல், தொடர்ந்து பிசியான நடிகையாக இருந்து வருகின்றார். தற்போது ஒரு படத்திற்கு ராஷ்மிகா மந்தனா, ரூபாய் 14 கோடிகள் சம்பளம் வாங்குகின்றார் என கூறப்படுகின்றது.தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்துள்ளார். ஆனால் இவரது சினிமா வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னர், இவர் சந்தித்த இன்னல்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், நான் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த கால காலட்டத்தில், எங்கு ஆடிஷன் நடந்தாலும் சென்று முயற்சிப்பேன். ஆடிஷன் முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது கண்ணீருடனே திரும்பியிருக்கின்றேன். ஆடிஷன் செய்தவர்கள் இந்த க்கதைக்கு நான் பொருத்தமற்றவள் எனக் கூறியிருந்தாலும் பரவாயில்லை, நடிகைக்கான முகமே எனக்கு இல்லை எனக் கூறி நிராகரித்தார்கள். இப்படியாக 20 முதல் 25 படங்களில் என்னை நிராகரித்திருப்பார்கள். ஆனாலும் நான் எனது முயற்சியைக் கைவிடாமல், தொடர்ந்து முயற்சித்தேன். ஒரு படத்தில் நடிக்கத் தேர்வாகி, மூன்று மாதங்கள் படத்திற்கான பயிற்சி நடந்த பின்னர் அந்த படம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.