மத்திய ஆசியப்பகுதியில் அமைந்துள்ள கோபி பாலைவனம் 10,00,000 சதுர கி.மீ பரப்பளவினைக் கொண்ட உலகின் ஐந்தாவது பெரிய பாலைவனமாகும்.
இது இரு நாடுகளின் எல்லைகளைப் பிரிக்கின்றது. அதில் ஒன்று சீனா. மற்ற நாடு மொங்கோலியா.
இதன் பெரும்பான்மையான பகுதி மணற்பாங்காக அல்லாமல் கற்பாங்காகவே உள்ளது.
திபெத்திய பீடபூமியால் உருவாக்கப்பட்ட மழைநிழல் பாலைவனம் இது. இங்கு மழையே கிடையாது. இமயமலையானது இந்தியப் பெருங்கடலில் இருந்து வரும் மழைமேகங்களைத் தடுத்து இப்பகுதியை பாலைவனமாக்கி உள்ளது. எனவே இது மழை மறைவுப் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.
இது குளிர் பாலைவன வகையைச் சார்ந்தது. இங்கு வெப்பநிலை கோடையில் 50 டிகிரி செல்சியஸாகவும், குளிர்காலத்தில் -40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.