தெற்காசியாவின் வளிமண்டலத்தில் அதிக மாற்றங்கள் உருவாகி வருகிறது. பறக்கும் நதிகள் என்று அழைக்கப்படும் வளிமண்டல நதிகள் பிறந்துள்ளன.
இது பட்டை வடிவிலான கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய தொடர் நீராவி ரிப்பன்களாகும் (ribbons of water vapour).
கடலின் வெப்பம் அதிகரித்து கடல் நீர் ஆவியாகும் போது நீராவியின் மிகப்பெரிய, கண்ணுக்குத் தெரியாத இந்த ரிப்பன்கள் உருவாகின்றன. அவை ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் அகலம் கொண்டவை. இந்த நீராவி ரிப்பன்கள், வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு பட்டை அல்லது ஒரு நெடுவரிசையை உருவாக்குகிறது.
இது மேலே உயர்ந்து, குளிர்ச்சியான அட்ச ரேகைகளுக்கு நகரும்போது, ‘பறக்கும் நதிகள்’ உருவாகி அதிதீவிர மழை பொழிகின்றன. இது வான்வெடிப்பு (cloudburst) போன்றே இருக்கும். அதன் பின்னர் கனமழை அல்லது பனியாகப் பெய்து, வெள்ளம் மற்றும் ஆபத்தான பனிச்சரிவுகளை ஏற்படுத்தும் அளவுக்குப் பேரழிவுக்கு வழிசெய்யும்.