சீர்வளர்சீர் குமரவேல் நாயனார் வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலின் 37 ஆவது ஆண்டு ஆடிப்பூர மகோற்சவத்தில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி (06.08.2024) தமிழகத்திலிருந்து இலங்கை வருகை தரவுள்ளார்.
இவர் பகையில்லா உள்ளம் பட்டினியில்லா வயிறு, நோயில்லா உடல் என மக்களை நடைமுறைப்படுத்தி வருபவரும், சித்தர்கள் மகாபொற்சபை மடாலயம் உருவாக்கி சுமார் 23 ஆண்டு காலமாக தமிழ் சித்த மரபோடு சித்தமருத்துவம், ஆலயமரபு வழிபாடு, கும்பாபிஷேக பணிகள் மற்றும் யந்திர பூஜைகள், ஆகமவழிபாடு, சித்தர்கள் வழிபாடு ஆகியவற்றை நடத்தி வருபவருமாவார்.
மயூராபதி ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தில் நடைபெறும் தேர்த் திருவிழா நிழ்விலும் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இவர் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தாயகம் திரும்புகிறார். மருத்துவமுகாம் அமைத்து மக்களை நல்வழிப்படுத்துதல் உடல், மனம் செம்மைப்படுத்துதல், கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு இயற்கை மருத்துவம் புரிதல் போன்ற பணிகளிலும் இவர் ஈடுபடுகின்றார்.