44
விண்ணில் வந்தது வெண்ணிலா
வெளிச்சம் தந்தது பொன்னிலா
கண்ணில் நின்றது அந்நிலா
குளிர்ச்சி தந்தது தண்ணிலே
நிலவை மேகம் மூடுது
மௌனராகம் பாடுது
விலகி நிலவும் ஓடுது
வேறிடத்தைதத் தேடுது
வட்டமான வெண்ணிலா
வையமெங்கும் ஓர் நிலா
இட்டமாக யாவரும்
இனிதே நாடும் வெண்ணிலா!
தங்கம் போல மின்னுது
தவழ்ந்து எங்கோ செல்லுது
எங்கு சென்ற போதிலும்
எம்மை விட்டுச் செல்லுமோ?