சந்தை அல்லது கடைகளில் ஆப்பிளையோ அல்லது வேறு பொருட்களையோ வாங்கும்போது அதில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். பொதுவாக நாம் ஆப்பிளை சாப்பிடுவதற்கு எடுத்ததும், அதில் இருக்கும் ஸ்டிக்கரை நீக்கி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களை படிப்பதில்லை. ஒவ்வொரு ஆப்பிளிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்கப்படுகிறது. இதன் உண்மை 99% வீதமானோருக்கு தெரியாது.
ஆப்பிளில் இருக்கும் ஸ்டிக்கரில், பழத்தின் தரம் மற்றும் அது எப்படி வளர்க்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் உள்ளன.
PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கையானதா, மரபணு மாற்று உற்பத்தியா, வேதி உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
எவ்வாறு அறிவது :
1. PLU codeஇல் 4 எண்கள் இருந்தால் – முழுக்க வேதி உரம் கலந்தது.
2. PLU codeஇல் 5 இலக்கம் இருந்து அது “8” என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
3. PLU codeஇல் 5 இலக்கம் இருந்து அது “9” என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.