Home » ஊழலுக்கு எதிரான தேசிய நிகழ்ச்சி நிரல் அறிமுகம்; ஒரு வரலாற்று நடவடிக்கை
வார இறுதி கேள்வி

ஊழலுக்கு எதிரான தேசிய நிகழ்ச்சி நிரல் அறிமுகம்; ஒரு வரலாற்று நடவடிக்கை

by Damith Pushpika
July 28, 2024 6:00 am 0 comment

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற ஒரு பாடல் வரி கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் நடைமுறையில் இது சாத்தியமாகாது. திருட்டை ஒழிக்க வேண்டுமாயின், கடுமையான சட்டங்கள் வேண்டும். வலுவான சட்டக் கட்டமைப்பு வேண்டும். இங்கே திருடர் என்று சொன்னவுடன் சாதாரணமாக வீடு புகுந்து திருடர்களை விட மக்களின் பணத்தைத் திருடும், வீண்விரயம் செய்யும், ஊழல், மோசடியாளர்களைப் பிடிக்க வேண்டும் என்பது இலங்கை மக்களின் மிக நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது.

இப்போது திருடர்களைப் பிடிக்கவும் முடியும். சிறையில் அடைக்கவும் முடியும். அதற்கான சட்டக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

“மோசடி, ஊழல் மற்றும் விரயம்” என்பது இலங்கை அரசியல் அரங்கில் மிகவும் பிரபலமான சொற்பிரயோகங்களாக உள்ளன. கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்து தேசிய தேர்தல்களிலும் ஊழல், மோசடி மற்றும் வீண்விரய ஒழிப்பு என்பது ஒரு முக்கிய அரசியல் கோசமாக இருந்து வந்துள்ளது.

1994 ஜனாதிபதித் தேர்தலின் போது ‘அத்தகையோரை காலிமுகத் திடலில் நிறுத்தி தண்டிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டது முதல் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவது வரை அனைத்துக் கட்சிகளினதும் எதிர்க் கட்சிகளினதும் கோஷங்களில் ஊழலுக்கு எதிரான செயற்பாடே முதன்மை பெற்றிருந்தது என்றால் அது மிகையல்ல. ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதிகள் பலர் பதவிக்கு வந்த போதிலும், ஊழலுக்கு எதிரான வேலைத் திட்டமொன்றை அமுல்படுத்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்படும் வரை காத்திருக்க நேரிட்டது.

2015 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தில் முதல் தடவையாக இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான சட்டம் வலுப்படுத்தப்பட்டது. 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சட்டம் வலுவிழந்த போதிலும், 2022ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆட்சியை மேம்படுத்தி, மோசடியை புறந்தள்ளி, அரச நிதி மற்றும் கடன் நிலைத்தன்மையை மீண்டும் நிறுவுவதையும் பொருளாதாரத்தை அதன் பிரதான பொறுப்பாக மாற்றுவதையும் தனது பிரதான பொறுப்பாக ஏற்று 21 ஆவது அரசியலமைப்பின் ஊடாக மீண்டும் அதனை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்.

அத்தோடு நின்றுவிடாது, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தின் கீழ், இலங்கை அரசாங்கம் மார்ச் 2023 இல் ஆளுகை கண்டறியும் மதிப்பீட்டிற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைக் கோரியது. இவ்வாறாக, சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு நிர்வாக முறையை மேம்படுத்துவதற்கும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் பரிந்துரைகளை வழங்கியிருந்தது. அந்த பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க இலஞ்ச ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாடுபட்டார்.

அதேசமயம், ஊழலுக்கு எதிரான ஐ.நா சமவாயத்தின் நிதிச் செயற்பாட்டு செயலணியின் தரங்களுக்கு ஏற்ப சொத்துக்களை மீட்பதற்கான பரந்த அதிகாரங்களைக் கொண்டதாக குற்றச் செயல்களினால் கொள்வனவு செய்த சொத்துக்கள் தொடர்பான சட்டவரைபு தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பின்னணியில், நிர்வாகத் தீர்ப்பு மதிப்பீட்டின் தொழில்நுட்ப ஆதரவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு, ஊழல் ஒழிப்புக்கான சட்ட, நிறுவன மற்றும் மூலோபாய கட்டமைப்பிற்கு ஏற்ப ‘ஊழலுக்கு எதிரான தேசிய நிகழ்ச்சி நிரலை’ அமுல்படுத்தும் நோக்குடன் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

உண்மையில், இது இந்த நாட்டில் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு வரலாற்று முக்கியமான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. ஊழலை ஒழிப்பதற்கான வலுவான பொறிமுறையை அது கொண்டுள்ளது. அதில் முதலாவது, 2023இல் இயற்றப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் முழு அமுலாக்கத்தையும் உள்ளடக்கியது. ஒரு செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்கும், செயல் திட்டத்தின் முன்னேற்றத்தை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மதிப்பாய்வு செய்வதற்கும், செயல் திட்டத்திற்கு போதுமான பட்ஜெட் ஒதுக்கீடுகளை வழங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2025‍ – 2029 காலக்கெடுவுக்கான தெளிவான தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டத்தை உருவாக்குவதும் இந்த நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் சட்டபூர்வ அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தை திருத்துதல் என்பனவும் இந்த தேசிய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன், கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய சரியான பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிய பிரதம கணக்கியல் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இருந்து அது தொடர்பான மேலதிக கட்டணத்தை வசூலிக்க கணக்காய்வாளர் நாயகத்தின் அங்கீகாரத்தையும் ஜனாதிபதி இந்தத் தேசிய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கியுள்ளார்.

பயனுள்ள மற்றும் வெளிப்படையான சொத்து வெளிப்படுத்தல் மற்றும் பொறுப்பு இணக்க அமைப்பை நிறுவவும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இணையதளத்தில் இந்த சொத்து அறிவிப்புகளை வெளியிட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு இந்த திட்டத்தை அரை ஆண்டு மற்றும் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சில ‘கனவு நிதியமைச்சர்கள்’ கறுப்புப் பணத்தை தூய்மையாக்கி நாட்டின் தேசிய வளர்ச்சியில் முதலீடு செய்ய சட்டங்களை கொண்டு வருவதாக கூறி வருகின்றனர். குற்றம் மற்றும் பணமோசடி மூலம் சம்பாதித்த சொத்துக்களை மீட்பதற்கான தேசிய மூலோபாயத்தையும் கொள்கைகளையும் உருவாக்க ஜனாதிபதி ரணில் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதற்காக, இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரங்களின்படி, முறையான செயற்பாடுகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குதல், அத்துடன் புதிய விசாரணைகள் மூலம் முறையான வழக்குப்பதிவு மற்றும் தண்டனை வழங்குதல் மற்றும் அரசியல் ரீதியாக வெளிப்படும் நபர்களை அடையாளம் காணுதல் ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த தேசிய நிகழ்ச்சி நிரல், ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குகளை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

அரச கொள்வனவில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி முன்வைத்த ‘ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலில்’ சர்வதேச தரத்திற்கு அமைவாக அரச பெறுகைச் சட்டத்தை (Public Procurement Law) அமுல்படுத்துவதும், ஒரு பில்லியன் ரூபாய்க்கு அதிகமான அரச கொள்வனவு (பெறுகைகள்) ஒப்பந்தங்களின் தகவல்களை வெளியிடுவதும் அடங்குகிறது.

வரி விலக்கு அளிக்கப்பட்ட மதிப்பீட்டில் அனைத்து விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களையும் பகிரங்கப்படுத்தவும், முதலீட்டு ஊக்குவிப்பு நிபந்தனை செலவீனம் மற்றும் முன்மொழிவுகளை மதிப்பிடுவதற்கும், முறையான செயல்முறை அமைக்கப்படும் வரை, மூலோபாய மேம்பாட்டுத் திட்டச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் பயிற்சி பெற்ற மற்றும் சுயாதீனமான ஊழியர்களை உருவாக்குவதற்கு அரச நிறுவனங்களைச் சீர்திருத்துவதற்கும் அரசாங்கத்திற்கு வருமானத்தைப் பெற்றுத் தரும் திணைக்களங்களில் குறுகிய கால ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுப்பது போன்ற சாதகமான நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியளித்தலின் இரண்டாவது மீளாய்வு மூலம் வழங்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் முழு ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பையும் வலுப்படுத்தும் திட்டத்தை இந்த நிகழ்ச்சி நிரல் முன்மொழிந்துள்ளது.

தற்போதைய ஊழல் எதிர்ப்பு முயற்சிகள், லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவை செயற்படுத்துதல், அரச நிதி நிர்வாகம், அரச நிதி முகாமைத்துவம், அரச சொத்துகளைக் கண்காணித்தல், முகாமைத்துவம் செய்தல், பண மோசடியைத் தடுத்தல், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்தல் ஆகியவையும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. ஊழலைச் சரியாகக் கண்டறியாமை, வழக்குத் தொடராமை, தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமை என்பன தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. நிர்வாக மற்றும் சட்ட குறைபாடுகளும் அதற்கு காரணமாக அமைந்தன.

இந்நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக தற்போதுள்ள உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்த முன்வைக்கப்படும் மிகவும் பொருத்தமான வேலைத் திட்டம் ஜனாதிபதி ரணிலின் ஊழலுக்கு எதிரான தேசிய நிகழ்ச்சி நிரல் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது. ஊழல், மோசடி மற்றும் வீண்விரயத்திற்கு எதிராக செயற்படும் முற்போக்கு சக்தி ஏதேனும் இருந்தால், ஜனாதிபதி ரணிலின் தேசிய ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்த இடையூறு செய்யாது முழு ஆதரவளிக்க வேண்டும். உண்மையான ஊழல் எதிர்ப்பாளர்கள் யார் என்பதை வார்த்தைகளால் அன்றி செயலிலும் நிரூபிப்பதில் ஜனாதிபதி ரணிலின் தேசிய ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்த இடையூறு செய்யாது முழு ஆதரவளிக்க வேண்டும்.

உண்மையான ஊழல் எதிர்ப்பாளர்கள் யார் என்பதை வார்த்தைகளால் அன்றி செயலிலும் நிரூபிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும்.

களனி பல்கலைக்கழக பொருளியல் கற்கைகள் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் சுனந்தா மத்துமபண்டார.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division