கனடாவில் இருக்கும் Saguenay (செகுனேய்)நதியில் 1996ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியான 10 பேரின் நினைவாக ஒரு சின்னம் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.அதன் பெயர் The Pyramide des Ha! Ha! அது பிரமிட் வடிவமானது. அந்த பிரமிட்டின் பெயரே Ha!Ha! தான். Ha!Ha! என்றால் பிரெஞ்சு மொழியில் ”எதிர்பாராத தடை/இடஞ்சல்கள்” என்று அர்த்தமாம். பெயர் மட்டுமல்ல பிரமிட்டும் வித்தியாசமாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வீதிகளில் விளைநிலங்களுக்கு வைக்கப்படும் சமிக்ஞை பலகைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரமிட்டில் 3000 சமிக்ஞை பலகைகள் இருக்கின்றன.
பிரமிட்டின் தலைப்பகுதி வரை மக்கள் சென்று பார்வையிட படிக்கட்டுகளும், உச்சியில் மையப்புள்ளியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு வித்தியாசமான பிரமிட் அமைக்கப்பட காரணமென்ன? 1996ஆம் ஆண்டு Saguenay நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இறந்துபோன 10 பேரின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கிறது இந்த பிரமிட்.