NDB வங்கி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை முழுவதும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர, தொழில்முயற்சியாளர்கள் [SMEகள்] மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு [MSME கள்] அத்தியாவசிய நிதி உதவிகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தனது புதிய ‘SME Re-Energizer’ கடனை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது.
இந்த முயற்சியானது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும், நாட்டில் வளர்ந்து வரும் வர்த்தக செயற்பாடுகளை ஆதரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் NDB இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.
பதிவுகளுடனான சிறிய மற்றும் நடுத்தர சுயதொழில்வாண்மை வாடிக்கையாளர்களிற்கு ஆண்டுக்கு 7 சதவீதம் எனும் உச்ச போட்டித்தன்மைமிக்க வட்டிவீதத்தில் தலா 15 மில்லியன் வரையில் முதலீட்டுக் கடன்களை வழங்குகின்றது. இந்த திட்டமானது, உற்பத்தி, கட்டட நிர்மாணம், ஏற்றுமதி, சுற்றுலா, ஆடை, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளை இலக்காகக் கொண்டுள்ளது.
அத்துடன் நெகிழ்வான மீள்கொடுப்பனவுகளுடன், ஒவ்வொரு வர்த்தக நிறுவனத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நீண்ட கால நிதி தீர்வுகளை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.