பங்களாதேஷ் முழுவதும் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டாக்காவில் சுமார் 15 நாட்களாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தை ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்போது இடம்பெறும் வன்முறை சம்பவங்களால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு நாட்டிலுள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கலவரத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்க தொலைக்காட்சிக்கு தீ வைத்ததாகவும், நாட்டிலுள்ள அனைத்து தொலைக்காட்சி செய்தி சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இணைய இணைப்புகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளும் முடங்கியுள்ளன.