ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது ஹவா மஹால். இது ஆயிரம் ஜன்னல் மாளிகை என்றும் “காற்றின் அரண்மனை” என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஜெய்ப்பூரின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும்.
1799ஆம் ஆண்டு மகாராஜா சவாய் பிரதாப் சிங் என்பவரால் கட்டப்பட்ட ஹவா மஹால் ராஜபுத்திர கட்டடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துகாட்டாகும். லால் சந்த் உஸ்தாத் வடிவமைத்த, இம் மாளிகையில் தேன்கூடு போன்ற ஐந்து அடுக்கு முகப்பில் 953 சிறிய ஜன்னல்கள் உள்ளன. இந்த வடிவமைப்பு அரச குடும்பப் பெண்கள் திரு விழாக்களைக் காண பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
ஹவா மஹாலின் தனித்துவமான வடிவமைப்பு அதன் ஏராளமான ஜன்னல்கள் மற்றும் விராந்தைகள் சிறந்த காற்றோட்டத்தை அனுமதிக்கிறது. இந்த கட்டடக்கலை அம்சம் பாரம்பரிய ராஜஸ்தானி கட்டடக்கலையின் புத்தி கூர்மைக்கு சான்றாகும்.
ஜந்தர் மந்தர், சிட்டிட் பேலஸ் மற்றும் பரபரப்பான ஜொஹாரி பஜார் போன்றவற்றின் அற்புதமான காட்சிகளை ஹவா மஹாலின் மேல் தளங்களில் இருந்து கண்டு இரசிக்கலாம்.
பார்வையாளர்கள் அரண்மனைக்குள் இருக்கும் பல்வேறு இடங்களிலிருந்து பிங்க் சிட்டியின் காட்சிகளை அனுபவிக்க முடியும். ஹவா மஹாலில் ஒரு சிறிய அருங்காட்சியகம் உள்ளது. இதில் அரச காலத்தின் கலைப் பொருட்கள், சின்ன ஓவியங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், ராஜஸ்தானின் வரலாறு, பாரம்பரிய ராஜஸ்தானி கவசம், ஆயுதங்கள் மற்றும் அரச குடும்பத்தார் பயன்படுத்திய அலங்கார பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவை பார்வையாளர்களுக்கு கலாசாரம் மற்றும் கலை பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. ஹவா மஹால் ஜெய்ப்பூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக அமைகிறது.