நாட்டிய கலா மந்திரின் இயக்குநர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவியும் திருமதி புஷ்பகௌரி ஜெகநாதனின் புதல்வியுமான குணவர்ஷிகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஜூலை மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.துரைராஜாவும் சிறப்பு விருந்தினர்களாக சைவ மங்கையர் வித்தியாலயம் அதிபர் அருந்ததி இராஜவிஜயன், கல்வி வெளியீட்டுத் துறை முன்னாள் ஆணையாளர் நாயகம் சுப்பிரமணியம்பிள்ளை முரளிதரன், நர்த்தனா நடனப் பள்ளியின் இயக்குநர் ‘கலைமாமணி’ ‘பாரதகலாநிதி’ சிவானந்தி ஹரிதர்ஷன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்
அணிசேர் கலைஞர்களாக:- பாட்டு லாவண்யா ஜெயமோகன், மிருதங்கம் _ எம்.லோகேந்திரன், புல்லாங்குழல்- செல்வன் சிவஞானசுந்தரம் ஜூட், தாள தரங்கம் – செல்வன் நக்கீரன் கேதாரநாத் வயலின் – சுந்தரமூர்த்தி கோபிதாஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்