ஒட்டகத்தைவிட அதிக நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாழக்கூடிய உயிரினம் ஒட்டகச்சிவிங்கி. ஓரிரு வாரங்களுக்கு ஒரு முறைதான் இவை நீர் அருந்துகின்றன. கால்களின் அதிக உயரம் மற்றும் குட்டையான கழுத்தின் காரணமாக, மற்ற விலங்குகளைப்போல் நின்றுகொண்டே நீரைப்பருக இவற்றால் முடியாது.
இதற்கு தண்ணீர் வேண்டுமென்றால் முன்னிரு கால்களை அகட்டி வைத்தோ, மண்டியிட்டோ தான் பருக வேண்டும். இதனாலேயே இவை அடிக்கடி தண்ணீரைத் தேடுவதில்லை. மாறாக இவற்றின் உணவுகளிலிருந்தே தேவையான நீரை எடுத்துக்கொள்கின்றன. ஆனால், தண்ணீர் தேவை என்று வந்துவிட்டால், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 45 லீற்றர் தண்ணீரைக் குடிக்கின்றன.
ஒட்டகச்சிவிங்கிகளைத் தூங்கும்போது பிடிப்பது மிகக்கடினம். ஏனென்றால், ஒரு நாளில் இவை தூங்கும் நேரம் மொத்தமாக 30 நிமிடங்கள் தான். இவற்றின் கால்கள் (கால்களின் உயரம் மட்டுமே) சராசரியாக ஆறடி உயரம் கொண்டவை. ஒரு மரத்திலிருந்து உணவு உட்கொள்ளும்போது ஆணும் பெண்ணும் சாப்பாட்டுக்கு போட்டி வந்துவிடக்கூடாது என்பதற்காக வெவ்வேறு பகுதிகளைத் தேர்வுசெய்கின்றன.
ஒட்டகச்சிவிங்கிக்கு 4 வயிறுகள் உள்ளன. கூட்டமாக வசித்தாலும், தலைவன்/தலைவி என்று யாரும் கிடையாது.