108
ஹஜ்ஜுப் பெருநாள் தினமான நாளை 17ஆம் திகதி திங்கட்கிழமை ரூபவாஹினி நேத்ரா தொலைக்காட்சியில் பி.ப. 2.50 அளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புக் கவியரங்கம் ஒளிபரப்பாகும். தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெறும் கவியரங்கில் கிண்ணியா அமீர் அலி, பாத்திமா ஷினாஸ் அநாமிகா, நஜ்முல் ஹுசைன் ஆகியோர் கவிதை பாடுகின்றனர். நிகழ்ச்சியை முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம். கே. எம். யூனூஸின் வழிகாட்டலில் முபாரக் மொஹிதீன் தயாரித்தளிக்கிறார்.