Home » ரணிலின் குழுவில் சஜித் அணியின் பிரபலங்கள்

ரணிலின் குழுவில் சஜித் அணியின் பிரபலங்கள்

by Damith Pushpika
June 9, 2024 6:00 am 0 comment

ஜனாதிபதி தேர்தல் ஒத்திப்போடும் யோசனை எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிகொத்தவிற்குச் சென்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கு தேர்தல் தொடர்பான செயற்பாடுகளுக்கான பதவிகள் உட்பட பல பதவிகளை நியமித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டிருந்த ரஞ்சித் மத்தும பண்டாரவின் உறுப்புரிமை அவ்வேளையில் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

அதோடு நிற்காமல், அரசியல் அலுவலகமும் திறக்கப்பட்டது, அரசியல் அரங்கு ஒரு வினோதமான ஆட்டமாகும். செயற்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் ஞாயிற்றுக்கிழமை காலை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு சென்றார்.

அன்றைய தினம், ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் இடைநிறுத்தப்பட்ட கட்சி உறுப்புரிமையை விடுவிப்பதற்கான முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டதுடன், கட்சியின் அரசியல் ஒத்துழைப்புக்கான பாராளுமன்றக் குழுவிற்கும் அவர் நியமிக்கப்பட்டார்.

கட்சியின் ஏனைய உறுப்பினர்களாக வஜிர அபேவர்தன, ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, வடிவேல் சுரேஷ் மற்றும் ஐந்தாவது உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழுவிற்கு அறிவித்தார்.

இன்னும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தேர்தல் அமைப்பாளராக ஹரீன் பெர்னாண்டோவும், தேசிய தேர்தல்கள் பிரதிச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய செயலாளராக ரவி கருணாநாயக்கவும் பொருளாளராக பிரோஸ் ஷாப்டீனும் நியமிக்கப்பட்டனர். பொருளாளராக பணியாற்றிய மிஸ்பா சத்தார் கட்சியின் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். கிரிஷான் தியோடர் கட்சியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டமைக்கு செயற்குழுவின் அங்கீகாரமும் கிடைத்தது.

அதுமட்டுமல்லாமல், கட்சியின் எஞ்சிய பொறுப்பாளர்களை முன்பு போலவே நியமனம் செய்வதற்கும், கட்சியின் புதிய சபை அமைப்பாளர்களை நியமிக்கவும் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது. கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார ஜனாதிபதி ரணிலின் கைகளால் அனைத்து பிரதேச அமைப்பாளர்களுக்கும் நியமனக் கடிதங்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

சீரற்ற காலநிலை தொடர்பில் செய்திப் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார். ஜனாதிபதி, தலைமைச் செயலக தலைவர் சாகல மற்றும் பிரமித பண்டார ஆகியோரிடம் பேசி, இது குறித்து உடனடியாக ஆராயுமாறு அறிவுறுத்தினார். அதன்படி உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்குச் சென்று அதிகாரிகளை அழைத்து தேவையான அறிவுரைகளை வழங்கினர். பின்னர், சாகல, மாத்தறை மற்றும் சீதாவாக்கைக்குச் சென்று அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல்களைக் கேட்டறிந்து தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்தார்.

திங்கட்கிழமை அதிகாலை கொலன்னாலைக்குச் சென்ற சாகல, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி மரிக்கார் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருடன் முப்படையினரையும் பொலிஸாரையும் தொடர்பு கொண்டு மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார். இதற்கிடையில் இந்த செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ரணிலுக்கு தெரியப்படுத்தியதுடன், சேதவத்த கிராமத்தில் உள்ள தனது தாய்வழி உறவினரின் நலத்தை அறிய வரவுள்ளதாக ஜனாதிபதி சாகலவிடம் தெரிவித்தார்.

கொலன்னாவைக்கு சென்ற ஜனாதிபதி முதலில் ஆலயத்திற்குச் சென்று அங்கு வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பில் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் தாழ்வான நிலப்பரப்புகளை நிரப்புவதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் துயரங்களைப் பகிர்ந்து கொண்ட ஜனாதிபதியைப் பார்த்து அப்பகுதி மக்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அன்றைய தினம் மாலை அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. அன்றைய தினம் காலை ஜனாதிபதி ரணில் தலைமையில் அரசியல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர், குழுவின் பிரதானி சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் கூடியது. அங்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொகுக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது செய்திப் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்றைய தினம் அமைச்சர் டிரானின் பிறந்தநாள் என்று தெரிவித்தார். அதன்படி, ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடியபோது, ​​மெழுகுவர்த்தியுடன் கூடிய கேக்கைக் கண்டு டிரானும் ஆச்சரியமடைந்தார்.

அவருக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்த பின், அமைச்சரவை கூடியது. அன்று காலையிலும் மாலையிலும் டிரானுக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் கேக் வெட்டப்பட்டது.

மாலை ஜனாதிபதி செயலகத்தில் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. மோசமான வானிலை குறித்தும் டொப்ளர் இயந்திரம் வாங்குவது குறித்தும் பேசப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையின் இறுதியில் ஜனாதிபதி ரணில், “அந்த இயந்திரங்களைப் பற்றி இப்போது பேசி பயனில்லை. முதலில் மக்களுக்கான நிவாரணப் பணிகளைப் பார்ப்போம். மக்களிடம் சென்று குறைகளை கண்டறிந்து தேவையான தீர்வுகளை வழங்குவோம்” என்றார்.

ஜனாதிபதி ரணில் செவ்வாய்கிழமை காலை ருவன்வெல்ல பகுதிக்கு சென்று உறுமய- – உறுதிப்பத்திரங்களை வழங்கினார். அங்கு அவர் தனது உறவினர் வசிக்கும் மிதெனிய வளவுக்குச் சென்று சிறிது நேரம் தங்கியிருந்து திரும்பும் வேளையில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களிடம் நலம் விசாரிப்பதற்காகவும் சென்றார். வான்வழியாக பயணித்து வெள்ள நிலைமையை பார்வையிட்ட ஜனாதிபதி ரணில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசியில் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

புதன்கிழமை புதிய தூதர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் குழுவிற்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னர், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை சுற்றுச்சூழல் பணியாளர்கள மற்றும் 10 சிறந்த பசுமை ரயில் நிலையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ரவீந்திர ரந்தெனியவின் திரையுலக வாழ்க்கையின் அரை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு மாலையில் சென்றார் ஜனாதிபதி. அங்கு 1975 ஆம் ஆண்டு களனி அமைப்பாளராக ரவீந்திர ரந்தெனியவின் குடும்பத்தை சந்தித்ததை ஜனாதிபதி ரணில் நினைவு கூர்ந்தார்.

அதன் பிறகு இந்திய பிரதமர் மோடிக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். அங்கு தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணிலுக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

கொழும்பு ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் அலுவலகத்தை ஜனாதிபதி ரணில் வியாழன் காலை, சுப நேரத்தில் திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தை நிறுவுவதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன பெரும் பங்காற்றியிருந்தார். மகாசங்கத்தினர் மற்றும் ஏனைய சமய தலைவர்களின் ஆசிர்வாதத்திற்குப் பின்னர் அவர் குறிப்பேட்டில் எழுதிய முதல் குறிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

“ஆரம்பய –The Start” என இரு மொழிகளில் குறிப்பை எழுதி சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டதை அங்கு வந்திருந்தவர்கள் காண முடிந்தது. எந்தச் சூழ்நிலையிலும் தேவையான வார்த்தைகளை சரியான இடத்தில் பதிவு செய்யும் அவரது திறமை அனைவராலும் போற்றப்படும் விஷயமாக இருந்தது. பிரதமர் தினேஷ், அமைச்சர் நிமல் சிறிபால, அமைச்சர் பந்துல, அமைச்சர் ரமேஷ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் லான்சா ஆகியோருடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

அங்கிருந்தவர்கள் எதிர்க்கட்சிகள் எழுப்பும் 75 ஆண்டுகால சாபம் குறித்த உண்மைகளை முன்வைக்க வேண்டும் என கூறியபோது, ​​இரண்டு வருடங்களில் செய்த பணிகளை மக்களுக்குத் தெரிவிக்குமாறு ஜனாதிபதி கூறினார். இக்கட்டான நேரத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்று நாட்டை மீட்டெடுத்த பணிகள் குறித்த விடயங்களை அமைச்சர்களுக்கு வழங்குமாறு தெரிவித்தார்.

அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்த அவர், நிதியமைச்சகத்திற்கு வந்திருந்தார், அங்கு அமைச்சர்கள் குழு ஒன்று கூடியிருந்த நிலையில், ஜனாதிபதியுடன் எதிர்கால பணிகள் குறித்து கலந்துரையாடினார். ஜனாதிபதியின் அரசியல் அலுவலகம் திறப்பு மற்றும் வெள்ள அனர்த்தங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

“ஜனாதிபதி இன்று அரசியல் அலுவலகத்தை ஆரம்பித்தார். ஞாயிற்றுக்கிழமை சிறிகொத்தவுக்குச் சென்று கட்சிப் பணிகளை மாற்றினார். மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மறுபுறம், தேர்தலை ஒத்திவைக்கும் யோசனைகள் உள்ளன. மக்களைப் போலவே எங்களுக்கும் இது குறித்து கேள்விகள் உள்ளன.” என்று அமைச்சர் மனுஷ பேசும்போது, ​​அனைவரும் தலையசைக்க, ஜனாதிபதி புன்னகை புரிந்தார், ஆனால் எதுவும் பேசவில்லை.

“வெள்ளத்தின் போது ஜனாதிபதியும் மக்கள் மத்தியில் சென்றார். பிரதமரும் சென்றார். ஆளுங்கட்சி எம்.பி.க்களும் சென்றனர். ஆனால் அன்றைய தினம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் செல்லவில்லை. தண்ணீர் வற்றிய பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் அங்கு சென்றார். இது ஒரு வரலாற்றுப் பதிவு என்று பேராசிரியர் ஆசு மாரசிங்க கூறினார்.

இன்று நடைபெறவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் கலந்து கொள்வார்.

ஜனாதிபதி தலைமையில் மாத்தறையில் நடைபெறவுள்ள மக்கள் பேரணியை ஏற்பாடு செய்வதற்காக அங்கு சென்றிருந்த சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அண்மையில் உள்ள மண்டபத்தில் அமைச்சர் கஞ்சன மற்றும் மொட்டுக் கட்சி உறுப்பினர்களை சந்தித்தார்.

சாகல அங்கு இருப்பதை கேள்விப்பட்ட அமைச்சர் கஞ்சன அங்கு வந்து ஐ.தே.க கட்சி ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். பின்னர் சாகலவை அழைத்துக் கொண்டு கூட்டத்திற்கு சென்றார். ஜனாதிபதிக்காக கட்சிகள் இரண்டும் ஒரே மேடையில் நின்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division