42
கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று லிமுலஸ் என்ற நண்டு.
இது பல கோடி ஆண்டுகளாக, தோற்றம் மாறாமல் உள்ளது. இதை, வாழும் படிமம் என்பர்.
இதன் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். இரத்தத்தில், ‘அமீபோசைட்’ என்ற செல் உள்ளது. இது, பக்டீரியாவிலிருந்து வெளிப்படும் நச்சுத்தன்மையை கண்டறிய உதவும்.
இந்த நண்டின் இரத்தம் விலை மதிப்புள்ளது. இரத்தத்தை சேகரித்த பின் கடலில் விட்டு விடுவர். சில மாதங்களுக்குப் பின், நண்டை பிடித்து, மீண்டும் இரத்தம் எடுத்து பயன்படுத்துவர்.