ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோர்பரேஷன் ஜெனரல் லிமிடெட் (SLICGL) நிறுவனத்தினால் பூரண CAR (ஒப்பந்தக்காரர்களது அனைத்து அபாயவாய்ப்பு) காப்புறுதி விழிப்புணர்வு அமர்வு அண்மையில் கொழும்பு Courtyard by Marriott இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், நிர்மாணத்துறையைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரி சபையைச் சேர்ந்தவர்களுக்கு நிர்மாண செயற்திட்டங்களுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைத்துக் கொள்வதற்கு CAR காப்புறுதியினால் வழங்கப்படும் முக்கிய பங்களிப்பு தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.
CAR காப்புறுதியின் பல்வேறு உள்ளம்சங்களான காப்புறுதியின் தன்மை, அனுகூலங்கள், இடர் மதிப்பாய்வுகள், காப்புறுதி உள்ளம்சங்கள், உரிமைகோரல் நிர்வகிப்பு மற்றும் எதிர்பாராத இடர்கள் மற்றும் கடப்பாடுகளிலிருந்து செயற்திட்டங்களை பாதுகாப்பதற்கான சிறந்த செயன்முறைகள் போன்றன தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.
நிர்மாணத் துறையின் வளர்ச்சி மற்றும் மீட்சி தொடர்பில் SLICGL கொண்டுள்ள அர்ப்பணிப்பு குறித்தும் இந்த அமர்வின் போது வலியுறுத்தப்பட்டிருந்ததுடன், பங்காளர்களின் ஈடுபாடு மற்றும் முதலீடுகளை பாதுகாப்பதை உறுதி செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
நிர்மாணத்துறை எதிர்கொண்டுள்ள இடர் முகாமைத்துவ சவால்கள் தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து அர்த்தமுள்ள வகையில் உரையாடல்களில் ஈடுபடுவது, அறிவுப் பகிர்வு மற்றும் தொடர்பாடல் வாய்ப்புகள் ஆகியவற்றை முன்னெடுப்பதில் SLICGL கவனம் செலுத்தியிருந்தது.