Home » Vishwa தனிநபர் வங்கிச்சேவை செயலியை அறிமுகப்படுத்தியுள்ள சம்பத் வங்கி

Vishwa தனிநபர் வங்கிச்சேவை செயலியை அறிமுகப்படுத்தியுள்ள சம்பத் வங்கி

by Damith Pushpika
June 2, 2024 6:00 am 0 comment

இலங்கையில் வங்கித்துறையில் புத்தாக்கங்களில் முன்னிலை வகித்து வருகின்ற சம்பத் வங்கி, தனது புரட்சிகரமான மொபைல் பயன்பாடான Sampath Vishwa Retail ஐ பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இணைய வங்கிச்சேவைத் துறையில் குறிப்பிடத்தக்கதொரு சாதனையாக இந்த முற்போக்கான அறிமுகம் அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற சௌகரியம் மற்றும் அணுகலுக்கு உத்தரவாதமளிக்கின்றது.

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர் தளத்துடன், அதாவது, வங்கியின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 25% ஐ இது பிரதிநிதித்துவம் செய்வதுடன், இணைய வங்கிச்சேவையில் சௌகரியத்தைப் பொறுத்தவரையில், Sampath Vishwa Retail ஆனது சிகரத்தின் உச்சியில் திகழ்கின்றது. புதுப்பிக்கப்பட்டு, அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் பயன்பாடு, தங்குதடையின்றிய, பாதுகாப்பான, மற்றும் உள்ளுணர்வை ஏற்படுத்துகின்ற வங்கிச்சேவை அனுபவத்திற்கு உறுதியளித்து, இத்துறையில் புத்தாக்கத்தை முன்னெடுப்பதில் சம்பத் வங்கியின் அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்துகின்றது.

தங்குதடையின்றிய இடைமுகம் மற்றும் சர்வதேச தராதரங்களுக்கு அமைவான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றைக் கொண்டு, மீள்வடிவமைக்கப்பட்டுள்ள இச்செயலி, பயனர் அனுபவத்தில் புதிய தர ஒப்பீட்டு நியமத்தை நிலைநாட்டுகின்றது. வேகமான வழிகாட்டல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஒரு சில அசைவுகள் அல்லது தொடுகைகளுடன் பயனர்கள் தாம் விரும்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வடிவமைப்பில் சம்பத் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு இது சான்று பகருகின்றது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division