நுளம்புகள் இரு வழிகளில் நம்மை நெருங்குகின்றன.
இவை பார்வை மற்றும் வாசனையுடன் தொடர்புடையவை என்று புளோரிடா பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் பேராசிரியர் ஜோனதன் டே குறிப்பிட்டுள்ளார்.
நுளம்புகள் மாலை நேரத்தில் அதிக பார்வைத்திறனைக் கொண்டுள்ளன.
தனித்து நிற்கும் நிறங்களான கருப்பு, கடும் நீலம் அல்லது சிவப்பு நிற உடைகள் நுளம்புகளுக்கு எம்மை கண்டு கொள்வதற்கு எளிதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறத.
இந்த நிறத்தினால் உண்டாகும் வெப்பத்தை நுளம்புகள் எளிதாக உணர்கின்றன.
அதாவது, கடும் நிறங்கள் அதிகளவு வெப்பத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. கருப்பு நிறம் வெப்பத்தை அதிகளவில் உறிஞ்சும்.
இந்த வெப்பத்தை எளிதாக நுளம்புகள் உணர்ந்து தான் நம்மை கடிக்கின்றன. கடும் நிற ஆடைகளை அணிபவர்களை நுளம்புகள் கடிக்க முக்கிய காரணம் இது தான்.