இன்று 19ம் திகதி காலை 9 மணிக்கு – சீதை அம்மன் ஆலய கும்பாபிஷேகம், நுவரெலியா மாலை 6 மணிக்கு – சத்சங்கம், தாஜ் சமுத்திரா ஹோட்டல், கொழும்பு நாளை 20ம் திகதி – திருகோணமலை
சீதா அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கை வரும் குருதேவ் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார் .
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உலகளவில் போற்றப்படும் ஆன்மிக மற்றும் மனிதநேயத் தலைவர் ஆவார். குருதேவர் 1981ஆம் ஆண்டில் ஒரு சர்வதேச, இலாப நோக்கற்ற, கல்வி மற்றும் மனிதநேய அமைப்பாக வாழும் கலையை நிறுவினார்.
இந்த அமைப்பு உலகளவில் 184 நாடுகளில் இயங்கி, 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையைத் தொட்டு, உலகமே ஒரு குடும்பம் என பொருள் படும் “வசுதைவ குடும்பத்தை” உருவாக்கியுள்ளது.
உலகளவில், மனஅழுத்தம் இல்லாத, வன்முறை இல்லாத சமுதாயத்திற்கான இயக்கத்தை குருதேவ் முன்னெடுத்துள்ளார். அமைதியின் தூதர், உலகளவில் மகிழ்ச்சி மற்றும் தியானத்தின் குரு என அங்கீகரிக்கப்பட்டுள்ள குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தனது அறிவியல் மற்றும் வேதப் பயிற்சியின் மூலமாக இன்றைய காலத் தேவைகளுக்குப் பொருத்தமான பாதையைக் கண்டறிந்துள்ளார்.
உலகளாவிய, தேசிய, சமூக மற்றும் தனிநபர் என்கின்ற நிலைகளில் உள்ள சவால்களைச் சமாளிக்க, தனி நபர்களுக்கு வலுவூட்டும், திறமையூட்டும், நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் தனித்துவமான, சிறந்த பயிற்சிகளை உருவாக்கியுள்ளார்.
வாழும் கலை அறக்கட்டளை மூச்சுப் பயிற்சி, தியானம் மற்றும் யோகா உள்ளிட்ட மன அழுத்தத்தை நீக்கும் திட்டங்களை அளிக்கிறது.
வாழும் கலைக்கு பிரத்தியேகமான சுதர்சன் க்ரியா (SKY) என்பது மன அழுத்தத்தை நீக்குவதற்கும் உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதற்குமான ஒரு சக்திவாய்ந்த, தாளகதியுடன் கூடிய மூச்சுப் பயிற்சியாகும்.
SKY மூச்சுப் பயிற்சி அனைத்து 57 ஆர்ட் ஆஃப் லிவிங் பயிற்சிகளிலும் ஒரு முக்கிய அங்கமாய் அமைந்து உலகம் முழுவதிலும் கோடிக் கணக்கானவர்களுக்கு பயனளித்துள்ளது.
தேசிய-சமூக அளவில், குருதேவரின் திட்டங்கள் முக்கிய சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்படுகின்றன.
குருதேவர், தொலைதூரப் பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு 1,262 பள்ளிகளைத் தொடங்கி, இலவசக் கல்வியை வழங்குகிறார், 1,00,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது அதனால் பயனடைந்து, சீரிய குடிமக்களாக வளர உதவுகிறது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு, குருதேவர் தலைமையில் இயங்கும் அமைப்பின் செயல்பாடுகளின் ஒரு மிகப்பெரிய அங்கமாகும்.
இந்தியாவில் உள்ள 70 ஆறுகள் மற்றும் ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் தற்போது புத்துயிர்க்கப்பட்டு, 34.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர்.
வாழும் கலை தன்னார்வலர்கள் 36 நாடுகளிலும் 26 இந்திய மாநிலங்களிலும், 100 மில்லியன் மரங்களை நட்டுள்ளனர்.
அயோத்தி ராம ஜென்மபூமி சர்ச்சையில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடையே உரையாடல் மற்றும் புரிதலை எளிதாக்குவதில் முக்கியப் பங்காற்றிய, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தக் குழுவின் மூலம், மோதல் தீர்வுக்கு குருதேவ் முன்னோடியாக இருந்தார்.
FARC குக்கும் கொலம்பிய அரசாங்கத்திற்கும் இடையே 53 ஆண்டுகால இரத்தக்களரியான உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் குருதேவர் முக்கிய பங்கு வகித்தார். 2,00,000 பேரைக் கொன்ற ஆயுத மோதல், குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முன்னிலையில் செப்டெம்பர் 26, 2016 அன்று FARC மற்றும் கொலம்பிய அரசாங்கத்திற்கு இடையிலான சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.