தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் எந்தளவு தாக்கம் செலுத்துகின்றதோ அதே அளவு தாக்கம் பாடல்களும் செலுத்துகின்றது.
அவ்வாறு இருக்கும் பல பாடல்களுக்கு அருமையான வரிகளை எழுதியவர் பாடலாசிரியர் வைரமுத்து ஆவார்.
இவர் எழுதும் பாடல்கள் அனைத்தும் தமிழிலேயே காணப்படுகின்றது. அவ்வாறே தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்து கூறும் பனை மரத்தின் நன்மைகளை பற்றி சமீபத்தில் ஒரு பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
பனை மரம் வளர்க்கப்பட வேண்டும் என்ற கருவில் உருவாகும் படம் ‘பனை’ ஆகும்.
குறித்த திரைப்படத்தை ஹரீஷ், மேக்னா நடிக்க, ஆதி.பி.ஆறுமுகம் இயக்கியுள்ளார் இதில் பனை மரத்தின் பலன்களை கூறும் பாடல்களை எழுதியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.
இதனை பல சமூக அக்கறை உள்ள நபர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் பாராட்டி வருகினற்னர்.