கிரீஸ் நாட்டின் தேசிய கீதம் தான் உலகின் நீளமான தேசிய கீதம். பாடும் வகையில் உருகுவே நாட்டின் தேசிய கீதமே மிக நீளமானது. சுமார் 6 நிமிட நேரம் பாடப்படும்.
உலகின் மிகச்சிறிய தேசிய கீதம் ஜப்பானின் தேசிய கீதமாகும்.”கிமியாகோ” எனத் தொடங்கும் இது 5 வரிகளிலேயே முடிந்துவிடும். ஆனால் இந்திய தேசிய கீதம்தான் உலகிலேயே மிகக் குறுகிய காலத்தில் பாடி முடிக்கப்படும் தேசிய கீதம்.
கிரீஸ் நாட்டின் தேசிய கீதத்தில் 158 பத்திகள் உள்ளன. கிட்டத்தட்ட 6 நிமிடங்கள் அளவுக்கு நீளமானது. (பாடப்படுவது குறைவான அளவே) இந்த தேசிய கீதம் 1865இல் அங்கீகரிக்கப்பட்டது. இதில் 158 பத்திகள் என்றபோதும் 1865இல் இதன் பாடும் பத்திகளில் முதல் இரு பத்திகளை மட்டும் தேசிய கீதமாகக் கொண்டு பாடப்படுகிறது. 158 பத்திகள் என்றபோதும் 2 பத்திகள் மட்டுமே பாடப்படுகின்றன.
1966 முதல் சைப்ரஸூம் இதையே தனது நாட்டின் தேசிய கீதமாக பயன்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு முறை ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கும் போதும் கிரீஸ் நாட்டின் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்.
1896இல் முதல் ஒலிம்பிக் போட்டிகள் கிரீஸில் தொடங்கியதை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த நாட்டின் தேசிய கீதம் பாடப்படும்.