சந்திரன் பூமியை 27 நாள் 7 மணி நிமிடம் 43 வினாடிக்கு 1.4க்கு ஒருமுறை வீதம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்தச் சந்திரனை இழுத்துக் கொண்டு, பூமி சூரியனை 365 நாள் 6 மணிக்கு ஒரு முறை வீதம் சுற்றி வருகிறது. இவ்வாறு சுற்றுவதனால், பூமி வினாடிக்கு 18 1/2 மைல் ஓடுகிறது என்பது கணிப்பு.
பூமி நாளொன்றுக்கு 24 மணிக்கு ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. அதாவது மணிக்கு ஓராயிரம் மைல் வீதம் கிழக்கு முகமாகச் சுற்றுகிறது.
சூரியனோ இப் பூமியையும் சந்திரனையும் ஏனைய எட்டுக் கிரகங்களையும் அவற்றிற்குரிய எல்லாச் சந்திரன்களையும் சேர்த்து ஈர்த்துக் கொண்டு, விண்வெளியில் பறந்து செல்கிறது. இவ்வாறிருந்தும் அவை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாது தனக்குரிய பாதையில் ஓடிக் கொண்டிருப்பது, விண்வெளி அற்புதமே.
சாரணா கையூம்