51
சுறுசுறுப்புடன் நாம் நாளுமே
பயில்வோம் கலைகள் யாவுமே
விறுவிறுப்புடன் நாம் கூடியே
கற்றால் இன்பம் கோடியே!
நாட்டியம் ஆடுவோம் நன்றாக
நாடகம் போடுவோம் ஒன்றாக
சித்திரம் தீட்டுவோம் சீராக
சேர்ந்திசை பாடுவோம் அழகாக!
மரங்களை நடுவோம் குழிபறித்து
மலர்களைத் தொடுப்போம் மனமகிழ்ந்து;
சுரங்களைக் கற்போம் இனமறிந்து
சுகங்களில் திளைப்போம் நமை மறந்து!
இரவினில் வலம் வரும் நிலவினையும்
இமைகளைச் சிமிட்டும் விண் மீன்களையும்
அறிவியல் துணையுடன் ஆய்ந்திடுவோம்
நாளைய மனிதர்களாய் நாம்!
கல்லொளுவை பாரிஸ் - மள்வானை