20ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆப்பிள் பழங்கள் மக்களால் சாப்பிடப்படவில்லை.மாறாக அவை மதுபானங்கள் தயாரிப்பதில் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டன. 1900ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மக்கள் (குறிப்பாக ஆண்கள்) தண்ணீரைப் பருகினர். மற்ற நேரமெல்லாம் மது மட்டுமே அவர்கள் விரும்பி அருந்திய பானமாக இருந்திருக்கிறது. இதனால் அதிகம் அடிவாங்கி பாதிக்கப்பட்டது பெண்களும் குழந்தைகளும் தான். இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற விரும்பிய Women’s Christian Temperance Union போன்ற அமைப்புகள், ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், ஆப்பிளை மது தயாரிப்பதில் பயன்படுத்தக்கூடாது என்றும் மக்களிடையே பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். இப்படியான பிரச்சாரங்களால் மதுபானங்களில் கலக்கப்பட்ட ஆப்பிள்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
ஆப்பிள் தோட்டங்களை வைத்திருந்தவர்கள் இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய, தங்களின் விற்பனையை அதிகரிக்க “An Apple A Day keeps The Doctors Away” என்று மாற்றியமைத்து வெற்றிபெற்றனர்.