உலகளாவிய இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தனியுரிமை நிறுவனமான Kaspersky, இலங்கை, கம்போடியா மற்றும் பங்களாதேஷ் உட்பட ஆசிய பசுபிக்கிலுள்ள (APAC) புதிய பிரதேசங்களில் அதன் விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, பிராந்தியத்தில் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரங்கள் முழுவதும், குறிப்பாக நிறுவன இணையப் பாதுகாப்பு சந்தையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நிறுவனத்தின் பணியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை இது குறிக்கிறது.
இணைய அச்சுறுத்தல்கள் உலகளவில் தொடர்ந்து உருவாகி, பெருகி வருவதால், Kaspersky அதன் முழுமையான இணையப் பாதுகாப்பு தீர்வுச் சேவைகளை APAC இல் வளர்ந்து வரும் சந்தைகளுக்கு விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தைக் கொண்டுள்ளது. புத்தாக்கமான தீர்வுகள் மற்றும் நிபுணத்துவத்தை வழங்குவதில் நிரூபிக்கப்பட்ட சாதனையுடன், கம்போடியா, இலங்கை மற்றும் பங்களாதேஷில் தனிநபர்கள், அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் இணைய பாதுகாப்பு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள நிறுவனம் தயாராக உள்ளது.
Kasperskyஇன் இந்த புதிய பிராந்தியங்களில் தனது சந்தை தடத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையானது, அரசு, நிதி, சுகாதாரம் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு அவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப செயல்படும் இணைய பாதுகாப்பு தீர்வுகளை பெற்றுக் கொள்ள உதவும். நிறுவனத்தின் விரிவான கோப்புறை தனிநபர்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (SMBகள்), மற்றும் பெரிய நிறுவனங்கள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்பு நிறுவனங்களுக்கான இணைய பாதுகாப்பு தீர்வுகளை உள்ளடக்கியது.