45
அன்பின் ஆழம் அறிய ஓங்கி உயர்ந்து வளரும் மரங்கள்
அன்பின் ஆழம் அறிய போட்டி போட்டு எழும் மலைகள்
அன்பின் ஆழம் அறிய சுனாமியாய் எழும் கடல்கள்
அன்பின் ஆழம் அறிய விண்ணைத் தாண்டும் பறவைகள்
அன்பின் ஆழம் அறிய எட்டாத இடமெல்லாம்
புகும் காற்று
அன்பின் ஆழம் அறிய வண்மை பல கடக்கும் வேர்கள்
அன்பின் ஆழம் அறிய வாசத்தை அள்ளித் தெளிக்கும் மலர்கள்
இவை எல்லாம் கடந்து அன்பின் ஆழம் அறிய
யுகம் யுகமாய் தவம் கிடந்தும் தோற்றுப் போகும் மானிடர்கள்.
கைகளில் அள்ளி உடல் தழுவப் பசையும் அல்ல அன்பு
ஆழம் அறிந்து அளவாய்ப் பெற பண்டமும் அல்ல அன்பு
அன்பால் இணைந்து அன்பால் மடிந்து அன்பால் மீள் எழுவதே
அன்பு…….