Home » ஈழத்து இலக்கியத்தை உயிராய் நேசித்தவர்: குப்பிழான் ஐ. சண்முகன்

ஈழத்து இலக்கியத்தை உயிராய் நேசித்தவர்: குப்பிழான் ஐ. சண்முகன்

முதலாண்டு நினைவை முன்னிட்டு ெவளியாகும் கட்டுரை

by Damith Pushpika
April 28, 2024 6:55 am 0 comment

மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகனின் முதலாவது ஆண்டு (24/4/23) நினைவு தினம் இன்றாகும். வடமராட்சியில் திருமணமாகி வாழ்ந்த போதும் தனது பிறந்த ஊர் குப்பிழான் எனும் அடையாளத்தைத் தனது பெயருடன் அடையாளமாக தொடர்ந்து இட்டவர்.

1946 ஆகஸ்ட் 1ஆம் திகதி சுன்னாகத்தில் பிறந்த குப்பிழான் ஐ. சண்முகன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற ஓர் ஆசிரியர். சிறுகதை, கவிதை, திறனாய்வு, ஆன்மிகம் எனப் பல துறைகளில் எழுதிய குப்பிழான் ஐ. சண்முகன் அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்.

குப்பிழான் ஐ. சண்முகன் முதலாவது சிறுகதை “பசி” ராதா என்ற வார இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல ஆக்கங்கள் பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. 1975இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு “கோடுகளும் கோலங்களும்” சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.

இவரது நூல்களில் கோடுகளும் கோலங்களும் சிறுகதை தொகுதி – 1975இல் வெளியானது. அதன்பின்னர் சாதாரணங்களும் அசாதாரணங்களும் எனும் சிறுகதைகளின் நூல் 1983இல் வெளியானது. அத்துடன் அறிமுகங்கள் எனும் விமர்சனக் குறிப்புக்கள் நூல் 2003 இலும், உதிரிகளும், சிறுகதை தொகுப்பு 2006 இலும் வெளியானது.

யாழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பின் மூலமும், அதன் பின்னர் ஐ. சாந்தன், அ. யேசுராசா போன்றோரோடு சேர்ந்து “கொழும்பு இலக்கியக் கழகம்” மூலமும் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்ட குப்பிழான் ஐ. சண்முகத்தின் ஒரு பாதையின் கதை சிறுகதைகள் நூல் 2012இல் வெளியானது.

1976இல் சாகித்திய மண்டலப் பரிசை கோடுகளும் கோலங்களும் எனும் சிறுகதைத் தொகுப்புக்காக பெற்ற குப்பிழான் ஐ. சண்முகம், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் சங்கத்தின் “சங்கச் சான்றோர் பட்டம்” பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது பிரபஞ்ச சுருதி எனும் கவிதை தொகுப்பு 2014இலும் ஒரு தோட்டத்தின் கதை, சிறுகதைகளின் தொகுப்பு 2018 இலும் வெளியாகியது. 2023 24 ஏப்ரல் 24ஆம் திகதி மறையும் வரை அவரது உயிர்ப்பான எழுத்துக்கள் ஈழத்து இலக்கியத்திற்கு உத்வேகத்தை தந்துள்ளன.

மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகனின் கவிதை ஒன்றே அவரின் வாழ்வை பிரதிபலிக்கிறது.

குப்பிழான் மண்ணின் தனிப் பெரும் அடையாளமாகவும், சிறுகதை உள்ளிட்ட பல்துறை ஆளுமையாளராகவும், அனுபவப் பெட்டகமாகவும் திகழ்ந்த பிரபல எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் பெயர் மரணம் கடந்தும் நிலைக்கும் என்பது உறுதியாகும். ஈழத்தின் தலைசிறந்த மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகனுக்கு அஞ்சலிகளுடன், அவரது நூல்களை எதிர்கால சந்ததியினரும் வாசித்துப் பயன்பெறும் வகையில் இலத்திரனியல் புத்தகங்களாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரதும் ஆவலாகும்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division