இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து வழங்கும் தமிழ் இலக்கிய பெருவிழா இன்று 28ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு வவுனியா ஸ்ரீசிந்தாமணி விநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது ‘இரா. உதயணன் இலக்கிய விருது 2023′ வழங்கலும்’ வளர் தமிழ் கலைச்சொற்கள்’ நூல் அறிமுகமும் நடைபெறவுள்ளன.
அதி உயர் இலக்கிய விருது 03, வாழ்நாள் சாதனையாளர் விருது 03, சிறந்த ஆவணக்கலை சேவை விருது 01, சிறந்த ஊடகவியலாளர் விருது 02, இளம் ஊடகவியலாளர் விருது 01, நாவல் இலக்கிய விருது 03, சிறுகதை இலக்கிய விருது 02, கவிதை இலக்கிய விருது 02, சிறுவர் இலக்கிய விருது 03, தமிழ் வளர்ச்சி இலக்கிய விருது 01, மொழிபெயர்ப்பு இலக்கிய விருது 01, இனநல்லிணக்க இலக்கிய விருது 01, அயலகப் படைப்பு இலக்கிய விருது 02 ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வுக்கு கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமை தாங்கவுள்ளதுடன், முன்னிலை விருந்தினர்களாக புரவலர் ஹாஸிம் உமர், இலங்கைக்கான இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகங்களின் நிறுவனரும் தலைவருமான வவுனியூர் இரா. உதயணன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
முதன்மை விருந்தினர்களாக பேராசிரியர் த.மங்களேஸ்வரன், பேராசிரியர் சபா. ஜெயராசா, பேராசிரியர் வ.மகேஸ்வரன் ஆகியோரும் ஊடக விருந்தினர்களாக தினகரன் மற்றும் வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் இ.பாரதி, வீரகேசரி நிறுவனத்தின் செய்தி முகாமையாளர் வி.பிரபாகன், வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.