நடிகை பூஜா குமார் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசனுடன் நடித்த படத்தில் உள்ள ஒரு காட்சியை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 2000 ஆண்டு பூஜாகுமார் அறிமுகமானாலும் கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’ மூலம் தான் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ’விஸ்வரூபம் 2’ ’உத்தம வில்லன்’ ’மீன் குழம்பும் மண்பானையும்’ போன்ற படங்களில் கமல்ஹாசன் உடன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ’உத்தம வில்லன்’ திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் அந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் பூஜா குமார் ஆகிய இருவரும் நடிகர் நடிகையாக நடித்திருப்பார்கள் என்பதும் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ’உத்தம வில்லன்’ படத்திற்காக கதகளி டான்ஸ் ஆடிய காட்சி வரும் நிலையில் அந்த காட்சிக்காக மேக்கப் போடும் வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். கதகளி டான்ஸர் ஒருவரே தன்னை கதகளி நடன கலைஞராக மாற்றும் மேக்கப் போட்டுக் கொடுத்ததாகவும் அந்த படத்தில் அந்த காட்சியை தான் மிகவும் ரசித்து செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்த வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.