சவூதி அரேபியாவிலுள்ள அல்ப்ராஜ் அல் பெயிட் (Abraj Al-Bait) என்ற கடிகாரம் தான் உலகின் மிகப்பெரிய கடிகாரம். இது சவூதி அரேபிய அரசுக்கு சொந்தமான கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இது சவூதி அரேபிய நகரங்களை நவீன மயமாக்கும் திட்டப்படி அமைக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
சவூதி அரேபியாவின் புகழ்பெற்ற மக்கா மசூதிக்கு அருகிலேயே இக்கட்டடம் அமைந்துள்ளது.
உலகிலேயே அதிக செலவில் கட்டப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய கட்டடம் இது. (15 பில்லியன் அமெரிக்க டொலர்)
ஜெர்மனியில் தயாரான இந்த கடிகாரம் 147 அடி அகலம், 141 அடி உயரம் கொண்டது.
கட்டடத்தின் நான்கு பக்கங்களிலும், இந்த கடிகாரம் உள்ளபடி அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 17 கி.மீ. தொலைவில் இருந்தும் இக்கடிகாரத்தில் நேரத்தை பார்க்க முடியுமாம். அந்த அளவுக்கு உயரமானதாக அமைக்கப்பட்டுள்ளது.
இது புகழ்பெற்ற பிக்பென் கடிகாரத்தை விட 35 மடங்கு பெரியது.
இது மக்கா ராயல் ஹோட்டல் கடிகார கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் மட்டும் 2 மில்லியன் (20 இலட்சம்).
இக்கடிகாரத்தை ஜெர்மனி தயாரித்து வழங்கியுள்ளது.
மக்காவுக்கு புனிதப் பயணம் வருவோரைக் கவர்வதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.