இந்தோனேசியாவில் 350 கி.மீ. பரப்பளவு கொண்ட தீவுதான் கொமோடோ தீவு. இத்தீவில் உலகின் மிகப்பெரிய பல்லி இனமான கொமோடோ டிராகன் என்ற இராட்சத உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த டிராகன் விலங்குகள் கொமோடோ தீவில்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் இந்த டிராகனுக்கு கொமோடோ டிராகன் எனப் பெயரிடப்பட்டது.
சமீபகாலமாக கொமோடோ தீவிற்கு அருகிலுள்ள ரின்கா தீவிலும் இந்த உயிரினம் அதிகமான எண்ணிக்கையில் வளர ஆரம்பித்துள்ளன. இந்த உயிரினங்கள் 10 அடி நீளம் வரை வளரக்கூடியது. சிறுவர்களை அதிவேகமாக வேட்டையாடி உண்ணும் திறன் படைத்தது. அதனால் இந்த இரு தீவுகளிலும் மக்கள் வசிப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டனர்.