இலங்கை வணிகங்களுக்கான காலநிலை அபாயங்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற கருப்பொருளில் மே 7- – 9 வரை கொழும்பில் உள்ள ஷங்கிரி லா ஹோட்டலில் இலங்கையின் முதலாவது காலநிலை உச்சி மாநாடு 2024 ஐ இலங்கை வர்த்தக சம்மேளனம் நடத்தவுள்ளது.
காலநிலை மாற்றத்தை துரிதப்படுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய அபாயகரமான விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில், காலநிலை மாற்றத்தினால் ஏற்படவிருக்கும் அபாயங்கள் மற்றும் இலங்கை வர்த்தகங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்த தேசிய உரையாடலுக்கான தளமாக இந்த உச்சிமாநாடு அமையும்.
பிரதம அதிதியாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றி, மாநாட்டில் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல்களுக்கான ஏற்ற சூழலை உருவாக்கவுள்ளார். இந்த மூன்றுநாள் மாநாட்டில், காலநிலை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான முக்கியமான தேசிய மற்றும் சர்வதேசத் தலைவர்கள், காலநிலை அபாயங்கள் மற்றும் வாய்ப்புகள், இடர்களைத் தணிக்கத் தேவையான வசதிகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை வெற்றிகரமாகப் பயன்படுத்துதல் குறித்து கலந்துரையாடவுள்ளதுடன், கார்பன் பாவிப்பை குறைப்பதில் அதிக கவனம் செலுத்தும் தற்போதைய உலகில் இலங்கையின் வணிகங்கள் நன்றாக இருப்பதை உறுதிசெய்வதற்கான செயலூக்கமான கொள்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆராயவுள்ளனர்.