Home » கொள்கலன் இடமாற்ற சேவைகளை ஆரம்பித்தது ஹம்பாந்தோட்டை துறைமுகம்

கொள்கலன் இடமாற்ற சேவைகளை ஆரம்பித்தது ஹம்பாந்தோட்டை துறைமுகம்

by Damith Pushpika
April 28, 2024 6:00 am 0 comment

இந்தியப் பெருங்கடலில் கடல்சார் வர்த்தகப் பாதைகளின் மையத்திலும், ஆபிரிக்கா, அரேபிய மற்றும் கிழக்கு உலகங்களின் நடுவிலும் அமைந்துள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள தீவான இலங்கையானது வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

இலங்கையின் அமைவிடம், ஆசியாவிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு சரக்குகளைக் கொண்டுசெல்வதற்கு விரைவான மற்றும் திறமையான உலகளாவிய மற்றும் பிராந்தியதொடர்புகளை வழங்க உதவுகிறது. ஆண்டுதோறும் 60,000 க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்த கடற்பதையில் பயணிக்கின்றன, உலகின் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெயையும், உலகளாவிய கொள்கலன் போக்குவரத்தில் பாதியையும் அவை சுமந்து செல்கின்றன.

இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து முக்கிய துறைமுகங்களுக்கும் மிக அருகில் அமைந்துள்ள இலங்கை, குறிப்பாக இந்தியாவின் நடுத்தர வர்க்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய துணைக் கண்டத்துக்கு அதன் பீடர் வலைமைப்பின் மூலம் விரைவான மற்றும் எளிதான இணைப்பை வழங்கக்கூடிய ஒரு முக்கிய கேந்திர நிலையமாக உள்ளது.

பிராந்தியத்தில் கொள்கலன்களை ஏற்றியிறக்கும் கேந்திர நிலையமாக இலங்கை விளங்குவதற்கு, அதிகளவிலான கொள்கலன் கப்பல்களை அது கவர்ந்தால் மாத்திரம் போதாது. மாறாக, முனையங்களின் வினைத்திறன் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவற்றிலேயே அது தங்கியுள்ளன.

எனவே, பிராந்தியத்திற்கான ஒரு பரிமாற்ற மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதற்கு, மிகப் பெரிய அளவிலான இராட்சதக் கப்பல்களைக் கையாளும் திறன் கொண்ட துறைமுகத் திறனைக் கட்டியெழுப்புவதுடன், ஏற்பாட்டு சேவைகள், பௌதிக உட்கட்டமைப்பு, ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்தவும் வேண்டும்.

இலங்கையில் மூன்று முக்கிய துறைமுகங்கள் உள்ளன – மேற்கில் கொழும்பு, தெற்கில் ஹம்பாந்தோட்டை, கிழக்கில் திருகோணமலை. இவற்றின் மூலம் இலங்கை இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் சிறந்த கடல்சார் மையமாக உள்ளது.

எவ்வாறாயினும், கொழும்புத் துறைமுகம் ஏற்கனவே முழு அளவில் இயங்கி வருகிறது. மேலும், அது கொள்கலன் அல்லாத கப்பல்களைக் கையாளும் வசதிகளை மேம்படுத்த வேண்டும்,

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் (HIP) என்பது இலங்கையின் தென்பகுதியில் கட்டங் கட்டமாக அபிவிருத்தி செய்யப்படும் ஒரு ஆழ்கடல் துறைமுகமாகும். இந்த துறைமுகமானது சர்வதேச கிழக்கு-மேற்கு கப்பற் போக்குவரத்துக்கு 10 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது – சுயஸ் கால்வாய் மற்றும் மலாக்கா ஜலசந்தி, தெற்காசியா மற்றும் வங்காள விரிகுடா என்பனவற்றுக்கான கடல் நுழைவாயிலில் ஒரு மூலோபாயம் மிக்க இடத்தில் அமைந்துள்ளது.

இலங்கையில் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட ஆழ்கடல், பல்நோக்கு துறைமுகம் இதுவாகும். வழக்கமான சரக்குகள், மொத்தமாகக் கையாளப்படும் உலர் சரக்குகள், மொத்தமாகக் கையாளப்படும் திரவ சரக்குகள் போன்ற பலவற்றைக் கையாளக்கூடிய வகையில் இது விசேடமானதாக உள்ளது.

திருகோணமலை துறைமுகம் உலகின் இரண்டாவது சிறந்த இயற்கை துறைமுகமாகும்.

தற்போது, சீனாவின் சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பெனி லிமிடெட் (சிஎம்போர்ட்) கொழும்பு இன்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல்ஸ் லிமிடெட் (CICT) இன் 85% பங்குகளை கொழும்புத் துறைமுகத்திலும் அதேபோல ஹம்பாந்தோட்டையின் 70% பங்குகளையும் கொண்டுள்ளது. இரண்டுமே சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சியின் (பிஆர்ஐ) கீழ் அடங்கும் முக்கிய திட்டங்களாகும்.

இம்மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் முதல் தடவையாக கொள்கலன் ஏற்றியிறக்கும் சேவைகளை ஆரம்பித்தது. இம்மாதம் 9ஆம் திகதி Mediterranean Shipping Company கொள்கலன் இடமாற்ற சேவையை ஆரம்பித்தது.

சேவையைத் தொடங்கியது. கொள்கலன் இடமாற்ற சேவையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் தெற்காசிய பிராந்தியத்திற்கான கடல் இணைப்பு சுட்டெண்ணில் இலங்கையின் நிலையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறைமுகம், கிழக்கு மேற்கு கப்பல் பாதையில் பெரிய கப்பல்களுக்கு சேவை செய்யும் வகையில், உபகரணங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வதன் மூலம் கொள்கலன் இடமாற்ற சேவையை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுகங்களுக்கிடையில் கப்பல் இணைப்பை எளிதாக்குவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதலின் மூலம், உள்ளூர் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் நேரடி ஏற்றுமதி மற்றும் சரக்குகளை ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுகங்களுக்கிடையில் இடமாற்றவும் முடியும்.

கொள்கலன் சேவைகளை அறிமுகப்படுத்துவது, ஹம்பாந்தோட்டை துறைமுக கைத்தொழில் வலயத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உற்பத்திக்கான மூலப்பொருட்களின் இறக்குமதிக்கும் வழிவகுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கிடையில் கப்பல் தொடர்பு இருப்பது ஹம்பாந்தோட்டை பகுதியில் இலங்கையின் உற்பத்தி திறன்களை மேம்படுத்தும். இந்தப் புதிய வழித்தடமானது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன், ஹம்பாந்தோட்டையில் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருளை போட்டி விலையில் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்கும்.

இந்தியப் பெருங்கடலில் ஒரு முக்கிய ஏற்பாட்டியல் மையமாக மாறும் இலக்கை அடைவதற்கு, சீனா போன்ற உலகளாவிய கடல்சார் மற்றும் உற்பத்தியாளர்களுடன் இலங்கையின் பங்காளித்துவம் மிகவும் நடைமுறைச்சாத்தியமானது என்பதில் சந்தேகம் இல்லை.

அபி

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division