தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதி சூர்யா மற்றும் ஜோதிகா. இவரும் ஸ்டார் நட்சத்திரங்கள் என்றாலும் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து முழுவதுமாக விலகியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். தற்போது இவர் தனது மகன் தேவ் சினிமாவில் நடிப்பது குறித்து முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகை ஜோதிகா, ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள இவரின் தனித்துவமான நடிப்பும், துரு துருப்பான பார்வையும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று.
குழந்தைகளின் படிப்புக்காக மும்பையில் செட்டிலானதாக சூர்யா மற்றும் ஜோதிகா கூறிவரும் நிலையில், ஜோதிகா, மீண்டும் ஒரு இந்தி படத்தில் கமிட்டாகி உள்ளார் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு முதலில் ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு ஸ்ரீகாந்த் என வைக்கப்பட்டுள்ளது. இப்படம் மே மாதம் 10-ந் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஜோதிகாவிடம், உங்கள் மகன் தேவ், சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள இவர், நிச்சயம் அவர் நடிக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றால், அவர் இப்போது தான் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மகன், மகள் இருவருமே படிப்பின் மீது ஆர்வமாக இருக்கிறார்கள். ஒருவேளை படித்து முடித்த பிறகு அவர்கள் நடிக்க வேண்டும் என்று விரும்பினால் அது அவர்களின் விருப்பம் என்றார். தொடர்ந்து பேசிய ஜோதிகா, மகள் தியா அப்பா செல்லம் எப்போதும் அப்பா அப்பா என்றே சொல்லிக்கொண்டு இருப்பார். மகன் தேவ் எங்கள் இருவருக்குமே செல்லம் என்றார்.