நீள்சுமைகள்
குடும்பத்தை
வதைத்து
நிம்மதியற்ற நிலையில்
தவிக்கையில்
வாழ்வுக்கான பாதையை
செப்பனிட்டு
வளமான எதிர்காலம் கண்டிடவே
தோள்மீது பாரத்தைத் தானேற்றுத்
துடைத்துமே எறிந்திடத் துணிந்திடவே !
ஆழ்கடல் தாண்டிச் சென்றங்கு
அறியாத் தேசத்தில் நின்றிடவே !
விழியது நீர்தேக்கி வெதும்பி
வெந்திடும் மனதோடு ஆறுதலற்று
மொழியது புரியாத தேசத்தில்
மெளனத்தைப் பதிலாகக் கொடுத்துக்
கழியுடல் போலிங்கு உணர்வதைக்
களைந்து பெறுமதியான தொகைக்கு
வழியதைக் கண்டிடவே வாழ்வில்
வருத்தும் பணியானாலும் ஏற்றிடுவீர்
வலைமீது
மாட்டிக் கொண்டு
வசமிழந்த
மானைப் போலிங்கு
தலைகோதும்
ஆறுதல் இல்லாது
தவித்திடும் நிலையில் இங்கே
அலைபேசி
சுமந்து வந்திடும்
அன்னை
தேசத்தின் குரலிலே
மலைபோல மனப் பாரமும்
மறைந்தே சென்றிடும் பனிபோல
நலமது நிறைந்த வாழ்வில்
நிழலதைக் குடும்பம் சுவைத்திடவே!
தலமதை நம்பியே வந்தோரை
தாங்கிடும் தேசத்தின் கரங்களில்
பலதேச மனிதர்களை சந்தித்த
பசுமை கலந்த பயணத்தில்
சிலகால உறவுகளின் பிரிவுகள்
சிற்றெறும்பாக மனதை வருத்தும்
சுட்டெ ரிக்கும் வெயிலில்
சுடும ணல் தரையினிலே
தொட்டே எடுத்த பணியது
தொய்வே அற்றும் இருந்திடவே
விட்டு வந்த உறவின்
விடியல் கண் முன்னே!
பட்டொ ளிரவே பாடுபட்டே
பசிமறந்து உழைத்து
மகிழ்கின்றீர்
ஏரூர் றமீஸ் ஏறாவூர்