58
மழையே மழையே வா! வா!
மண்ணில் பொலிவைத் தா! தா!
செழித்த பயிர்கள் விளைந்திடவே
சீராய் மழையே வா! வா!
வளமும் நலமும் சேர்ந்திடவே
விளைந்து மழையே வா! வா!
உழவர் ஏக்கம் போக்கிடவே
உயிர்களை காத்திட வா! வா!
மனது குளிரவே வா! வா!
வரட்சி போக்கிடவே வா!வா!
வாட்டம் நீக்கிடவே வா! வா!
பஞ்சம் அகலவே வா! வா!
தவிக்கும் வெம்மை தணிந்திடவே
நயமாய் மழையே வா! வா!
பகைமை வறுமை பறந்திடவே
பாரோர் போற்றிட வா! வா!