இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், அதன் தேசிய வியாபார அறிமுகம் 2024 நிகழ்வை கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. “Unstoppable Together” எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு, நிறுவனத்தின் திரண்ட நோக்கு மற்றும் ஒருமைப்பாட்டுக்கான எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தி செயலாற்றியிருந்த ஆலோசகர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தனர். பெறுமதி வாய்ந்த காப்புறுதிதாரர்களுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் அவர்களின் திறன்கள் மற்றும் ஒப்பற்ற அர்ப்பணிப்பு போன்றவற்றை கௌரவித்திருந்ததுடன், வெற்றிகரமான செயற்பாட்டின் பிரதான தூண்களாக இந்த நபர்களையும், முகவர் விநியோக பிரிவையும் கொண்டாடியிருந்தது. இந்த ஆண்டின் முற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த Fast Starter போட்டியில் சிறப்பாக செயலாற்றியிருந்த 170க்கும் அதிகமான ஆலோசகர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தது. ஆலோசகர் பிரிவில் தேசிய வெற்றியாளராக டேவிட் தினேஷ் பாஸ்கரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். மேலும் பிராந்திய வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தனர். சிறிய மற்றும் நடுத்தரளவு பிரிவில் வாரியபொல பிராந்தியம் வெற்றியீட்டியிருந்ததுடன், பாரிய பிரிவில் புறக்கோட்டை பிராந்தியம் வெற்றியீட்டியிருந்தது. Fast Starter Zonal விருதுகள் பிரிவில், சிறிய பிரிவில் Northern Zone 1 வெற்றியீட்டியதுடன், நடுத்தரளவு முதல் பாரிய பிரிவில் Colombo Central Zone வெற்றியீட்டியிருந்தது.
2024 இல் திரண்ட வெற்றியை கொண்டாடிய யூனியன்அஷ்யூரன்ஸ்
224