ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதல் 09 பில்லியன் அமெரிக்க டொலர்வரை முதலீட்டை இரட்டிப்பாக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.
இதற்கமைய மசகு எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இரு மடங்காக அதிகரிக்க சினோபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளதுடன், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படுமெனவும், அந்த அமைச்சு தெரிவித்தது.
தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது, முதலீட்டு சபை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்ட பின்னர் மானிய விலையில் எரிபொருளை வழங்க நிறுவனம் நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.