Home » முதலீட்டை இரட்டிப்பாக்கும் சீனாவின் Sinopec நிறுவனம்

முதலீட்டை இரட்டிப்பாக்கும் சீனாவின் Sinopec நிறுவனம்

4.5 முதல் 09 பில். டொ. வரை முதலீடு

by Damith Pushpika
March 31, 2024 6:45 am 0 comment

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதல் 09 பில்லியன் அமெரிக்க டொலர்வரை முதலீட்டை இரட்டிப்பாக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இதற்கமைய மசகு எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இரு மடங்காக அதிகரிக்க சினோபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளதுடன், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படுமெனவும், அந்த அமைச்சு தெரிவித்தது.

தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது, முதலீட்டு சபை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்ட பின்னர் மானிய விலையில் எரிபொருளை வழங்க நிறுவனம் நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division