திக்கெட்டும் ஊடுருவியே
செய்திகளைப் பகிர்ந்தாய்
தினமும் அதிகாலை
அனைவரையும் மகிழ்வித்தாய்
திகட்டாதப் படைப்புகளை
தன்னகத்தே சுமந்தாய்
தியாக மனதுடன்
இனம், மதம், மறந்தே இனித்தாய்
உலகப் போரையும்
முதலில் நீயேசுமந்தாய்
உலக விளையாட்டுகளையும்
அழகாய்த் தந்தாய்
உண்மைச் செய்திகளால்
உலகை வென்றாய்
உனக்குநிகர் நீயென
நிருபித்து நின்றாய்
மலையக மக்களையும்
மறவாமல் எழுதினாய்
மகளிர் பக்கத்தையும்
உன்னில் தரித்தாய்
மழலை செல்வங்களையும்
மகிழ்வூட்டி வென்றாய்
மனங்களை இனிமையாக்கி
புன்னகையுடன் நின்றாய்
தித்திக்கும் உன்மொழியில்
மெய்மறந்து போனோம்
திறமையை வளர்க்க
உன்னை நாடினோம்
திறம்பட அனைத்தையும்
செய்தே வான்தொட்டாய்
தினகரனே உன்பிறந்தநாளை
ஊர்சார்பாய் வாழ்த்துகிறேன்