Home » கலப்பு மின்கல தீர்வுகளின் முன்னணி நிறுவனமான Battery Lab Private Limited

கலப்பு மின்கல தீர்வுகளின் முன்னணி நிறுவனமான Battery Lab Private Limited

by Damith Pushpika
March 24, 2024 6:00 am 0 comment

Battery Lab Private Limited ஆனது Aqua, Prius, Axio, Voxy, Noah, Camry, Hondg மற்றும் Lexus உட்பட சிறப்புமிக்க வாகன வடிவங்களுக்கு இலங்கைக்கு மின்கல நிறுவுதல் மற்றும் மீள் ஆற்றல் வழங்கலில் நிபுணத்துவம் பெற்ற ஏக ISO சான்று பெற்ற நிறுவனமாகும். விரிவான சேவைகளை வழங்கும் Battery Lab தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை உறுதி செய்கிறது.

நிகரற்ற வாடிக்கையாளர் திருப்திக்கான தமது பொறுப்பை கொண்டிருக்கும், Battery Lab எண்ணற்ற நன்மைகளை வழங்கி வருகிறது. இதில் இலவச வாகன ஸ்கேன்மீட்டமைப்பு சேவைகள், தடையற்ற நிறுவல் செயற்பாடுகள், மற்றும் நம்பகமான கலப்பு மின்கல தீர்வுகள் உள்ளடங்கும். மிக விரிவான உத்தரவாத உள்ளடக்கத்துடன் வாடிக்கையாளர்களின் மன அமைதி மற்றும் சிறந்த வாகன செயல்திறனை உறுதி செய்கிறது. Battery Lab இன் ஒவ்வொரு கலப்பு மின்கலனும் ஐக்கிய அமெரிக்காவை மூலமாகக் கொண்ட நுணுக்கமான ஆய்வு, மேம்பட்ட கருவிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்களால் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட எமது வடிவங்கள் தரமான மற்றும் நீடிக்கக் கூடியவையாக உள்ளன. தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளை வழங்குவதற்கு இவ்வாறான அர்ப்பணிப்புகளை செய்கிறது. Battery Lab தனது செயற்பாடுகள் அனைத்திலும் சுற்றுச்சூழல் சார்புடைய தீர்வுகளை வழங்குவதில் உறுதியுடன் செயற்படுகிறது. நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை கொண்டிருக்கும் Battery Lab Private Limited உடன் மோட்டார் வாகன அனுபவத்தை மேம்படுத்தலாம்.

“2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம், நிதி ஒழுங்குமுறை, தொழில்நுட்ப பலம், மற்றும் உன்னிப்பான கட்டுப்பாடு செயற்பாட்டில் உறுதியான அவதானத்துடன் பிரதான கொள்கைகள் மூலம் உறுதியாக வழிநடத்தப்படுகிறது. செயற்றிறன் மற்றும் பயனுள்ள முறைகள், அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்குவதற்காக தொடர்ச்சியாக பாடுபடுவதில் ஆரம்பம் தொடக்கம் நாம் முன்னுரிமை அளித்து வருகிறோம். தானியக்க மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை பெற்று, நாம் எமது செயற்பாடுகளில் உச்ச செயல்றிறன், உடல் உழைப்பை நம்பி இருப்பதை குறைத்து ஒட்டுமொத்த உற்பத்தியை மேம்படுத்த எமது செயற்பாடுகளை அமைத்துள்ளோம். இயந்திரங்களின் துல்லியமான இயக்கம், கோளாறுகளை மட்டுப்படுத்துவதை உறுதி செய்து எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் பொருத்தமாக எதிர்கொள்வதற்கு எமது தொழில்படை சிறந்த பயிற்சியை பெற்றுள்ளது. நீடித்த உத்தரவாத உள்ளடக்கத்தை ஆரம்பம் தொடக்கம் உறுதி செய்வது எமது பிரதான பொறுப்பாக கொண்டுள்ளோம். இந்த அர்ப்பணிப்பு சர்வதேச தரத்தை எட்டுவதற்கும், வெற்றிகளைக் காண்பதற்குமான பயணத்திற்கு உந்துதலாக அமைந்தது. இந்த வெற்றிப் பயணத்தை எதிரொலிப்பதாக தலைமை நிர்வாக அதிகாரியான பிரசாத் ஜேம்ஸ், சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த நிறுவனம் ஒன்றாக தமது நிறுவனம் உருவெடுத்திருப்பது தொடர்பில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டார். எமது அடிப்படைக் கொள்கைகளை உறுதியாக பின்பற்றுவது மற்றும் 2017 தொடக்கம் இடைவிடாத முயற்சிக்கு சாட்சியாக இந்த வெற்றி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வாசனா அபேநாயக்க

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division