இஸ்லாம் மனிதனைப் புடம்போட்டு நெறிப்படுத்திடவென தெளிவாக வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அல்லாஹ் பல கடமைகளை இறைவிசுவாசிகளுக்கு விதியாக்கியுள்ளான்.
அவற்றில் ரமழான் நோன்பு தொடர்பில் அவன் விஷேட கவனம் செலுத்தியுள்ளான். அதனால் தான், ‘நோன்பாளிக்கு நானே கூலி வழங்குகின்றேன்’ எனக் குறிப்பிட்டிருக்கின்றான். இதன் மூலம் நோன்பாளிகளை அவன் கண்ணியப்படுத்துவது தெளிவாகத் தெரிகின்றது.
அருள்மறையாம் அல் குர்ஆன் அருளப்பட்ட ரமழான் மாதத்தில் பசியையும் தாகத்தையும் ஆசைகளையும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் அமைய கையாள்வதன் பிரதிபலனாக நோன்பாளிகள் இவ்வாறு கௌரவிக்கப்படுகிறார்கள். அவர்களை ‘ரய்யான்’ என்ற வாயில் ஊடாக சுவர்க்கத்தில் பிரவேசிக்க அல்லாஹ் வாய்ப்பளிக்கிறான்.
நோன்பாளிகளைத் தவிர வேறு எவரும் அந்த வாயில் ஊடாக சுவர்க்கத்தில் பிரவேசிக்க முடியாது. இது மாபெரும் கண்ணியமும் அருளும் ஆகும்.
எனவே ரமழான் நோன்பை இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கு அமைய நோற்று சுவர்க்கத்தில் ரய்யான் வாயில் வழியாகப் பிரவேசிக்கும் பாக்கியத்தை பெற்றிட திடசங்கற்பம் பூணுவோம்.
முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ் (காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்