சென்னை சூப்பர் கிங் அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி, யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மாதுளனுக்கு வலைப்பந்து வீச்சாளராக (Net Bowler) இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். 17 வயதுடைய குகதாஸ் மாதுளன் எனும் மாணவர், யாழ். நகரைச் சேர்ந்தவராவார். இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவின் பாணியில் பந்து வீசும் குகதாஸ் மாதுளன், 117ஆவது வடக்கின் சமர் Big Match கிரிக்கெட் போட்டியில் பந்து வீசிய காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் குழாம் மற்றும் CSK தலைவர் மஹேந்திர சிங் தோணி ஆகியோரின் கண்காணிப்பில் மாதுளன் பயிற்சிகளை பெறுவதோடு, இம்முறை IPL தொடரில் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக பந்து வீசும் வாய்ப்பையும் அவர் பெற்றிருக்கிறார்.