ெடால்பின்கள் அனிச்சையாய் சுவாசிப்பதில்லை. ஒவ்வொரு முறையும், “இப்போது சுவாசிக்க வேண்டும்” என்று அவற்றின் மூளை இடும் கட்டளைக்குப் பிறகே சுவாசிக்கின்றன. சாப்பிடும்போதும், விழித்திருக்கும் போதும், விளையாடும் போதும், அவ்வளவு ஏன், தூங்கும் போதும் கூட இவற்றின் மூளை சுவாசிப்பதற்காக கட்டளையிட்டுக் கொண்டே இருக்கின்றன.
ெடால்பின்கள் தூங்கும்போது அவற்றின் பாதி மூளை மட்டும்தான் தூங்கும். மீதி மூளை சுவாசிப்பதற்கு கட்டளை போட்டுக்கொண்டிருக்கும்.
மனிதர்களைப் போலவே, இவைகளும் தங்கள் கூட்டத்தில் இறக்கும் ெடால்பின்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகின்றன. ெடால்பின்களுக்கு மோப்ப சத்தி சுத்தமாகக் கிடையாது. அதனால், அவற்றால் எந்தவித வாசனையையும் உணர முடியாது.
பழங்காலத்தில் ரோமானியர்கள் ெடால்பின்களை மீன் பிடிக்கப் பழக்கி வைத்திருந்தனர். 1990களில் ரஷ்ய கடற்படையினர், டொல்பின்களை மனிதர்களைக் கொல்ல பழக்கி ஈரானுக்கு விற்றனர்.
இன்றும் அமெரிக்க கடற்படையில் டொல்பின்களை உபயோகிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால், அவை மனிதர்களைக் கொல்ல பழக்கப்படுவதில்லை.