Home » மருந்துப் பொருள் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மொரிசன் அண்ட் சன்ஸ்

மருந்துப் பொருள் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மொரிசன் அண்ட் சன்ஸ்

by Damith Pushpika
March 17, 2024 6:00 am 0 comment

மொரிசன் கம்பெனி 1959இல் ஆரம்பிக்கப்பட்டது. இற்றைக்கு 65 வருடங்களுக்கு முன் மட்டக்குளியில் ஆரம்பிக்கப்பட்ட மொரிசன் அண்ட் சன்ஸ் கம்பனி இலங்கையில் மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. இலங்கையில் மருந்து உற்பத்தியில் முதலாவதாக கால் பதித்து ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ உற்பத்திக் கம்பனியாகும். இக் கம்பனி 2013ஆம் ஆண்டில் ஹேமாஸ் ஹோல்டிங் நிறுவனத்துடன் இணைந்த ஒரு துணை நிறுவனமாகும். அத்துடன் 2017ஆம் ஆண்டில் மொரிசன் அன்ட் ஜோன்ஸ் எனும் கம்பனியாகவும் மாற்றம் பெற்றது.

Morrison Gripe Mixture, Morisons Lacto Calamine மற்றும் Morisons Valetix போன்ற கருமபீடங்களில் நேரடியாக கொள்வனவு செய்யக்கூடிய பொருட்களுக்கு புகழ் பெற்றுள்ளது. இந்தியாவில் 100 வீதம் உள்ளுர் மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பங்களதேஷில் 95வீதம், பாகிஸ்தானில் 75வீதம், இலங்கையில் 15வீதம் மட்டுமே. ஏனைய 85வீதமான மருந்துப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் 600 மில்லியன் டொலர் மருந்துப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் இத்துறையை எமது நாட்டில் மேம்படுத்தினால் பாரிய நிதியை சேமிக்க முடியும். இலங்கையன் மருத்திவ உற்பத்திப் பொருட்களை மாலைதீவு, ஆபிரிக்க நாடுகளுக்கு நாமும் ஏற்றுமதி செய்ய முடியும்.

அரச வைத்தியசாலைகளிலும் மற்றும் வைத்தியர்களுக்கும் களஞ்சியப்படுத்தல், மருந்துத் தேவைகளை நிறைவேற்றல், மருந்துப் பொருட்கள் உற்பத்தி யினுடாக சந்தையில் பெருமளவு பிரசன்னத்தை கொண்டிருந்த போதிலும் இக் கம்பனியின் வர்த்தக நாமம் பெருமளவில் அறியப்படவில்லை. என இக் கம்பெனியின் ஹோமகம மருந்து உற்பத்தி மற்றும் ஆய்வு நிலையத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி தினேஷ் அத்தப்பத்து தெரிவித்தார்.

இக் கம்பெனியின் மருந்து உற்பத்திகள் மற்றும் ஆய்வு நிலையங்களைப் பார்வையிட்டு இலங்கையிலும் மருந்து உற்பத்தி நிலையங்கள் உள்ளன என்பதை பொதுமக்களுக்கு பிரசாரப்படுத்துவதற்கும் அறிக்கையிடுவதற்குமாக கொழும்பிலிருந்து பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அத்துடன் இவ் ஊடக மாநாடும் ஹோமாகமவில் உள்ள மருந்து ஆராய்ச்சி நிலையத்தில் 12.03.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிறைவேற்று அதிகாரி மேலும் கருத்துக் கூறுகையில், ஹோமாகம பகுதியில் நவீன வசதிகள் படைத்த மருந்துப் பொருட்கள் உற்பத்தி ஆலை 4 பில்லியன் ரூபா முதலீட்டில் உள்நாட்டு மருந்துப் பொருட்கள் வர்த்தக நாமத்தின் பெறுதியுடன் ஒப்பற்ற மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தை ஆரம்பித்தது.

இக் கம்பனியின் நோக்கம் உயர் சுகாதார பராமரிப்பு வசதிகளைப் பேணுவதாகும். உலகத் தரம் வாய்ந்த, உற்பத்திச் சிறப்புக்களைக் கொண்ட சிகிச்சை முறைகளை இலங்கையர்களுக்கு சகாய விலையில் வழங்கும் நம்பிக்கையை வென்ற மருந்துப் பொருட்கள் நாமமாக, மொரிசன் திகழ்வதுடன், உயர்மட்டத்தில் நேர்த்தியான செயற்பாடுகளைப் பேணுகின்றது. சுகாதார பராமரிப்புப் பிரிவுகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன் இதை மேற்கொள்கின்றனர்.

சிறந்த தரம் மற்றும் கட்டுப்பாட்டு விலையில் உயர்தர பாரமரிப்பை சாத்தியமாக்கும் நோக்கத்திற்கேற்ப இயங்குவது பெறுமதி சேர் சங்கிலியில் ஒப்பற்ற நேர்த்தியான செயற்பாடுகளை உயர்தர மட்டத்தில் முன்னெடுப்பது. மருந்துப் பொருள் வர்த்தக நாமத்தை கட்டியெழுப்புவதில் புதிய அத்தியாயத்துடன் பிரத்தியோகமான சிகிச்சைகளை அருகில் கொண்டு வரல், மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் 60 வருடங்கள் மேலான உறுதியான பிரசன்னத்துடன் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி.யின் பின்புலத்துடன் மேலும் வலுவூட்டப்பட்ட, நம்பிக்கையை வென்ற சிகிச்சை வழங்குவது என்ற நோக்கங்களுடன் முன்னேற முயற்சிப்பதாக இக் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தினேஷ் அத்தப்பத்து தெரிவித்தார்.

இக் கம்பனி ஒரே EU GMP முறைமையை பின்பற்றும் பொதுவான திண்ம மற்றும் திரவ மருந்துகள் OSD (Oral Solid dosage) OLD (Oral Liquid Dosage) உற்பத்தி நிலைய தரச்சான்றிதழைப் பெற எதிர்பார்த்துள்ளது.

மேலும் வழமையான செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று மொரிசன் சமூகப் பொறுப்புணர்வு கூட்டமைப்பு நிறுவப்பட்டு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. 2024 இலங்கையில் நீரிழிவு நிர்வாகம் மற்றும் கல்வியறிவூட்டுவதில் முன்னணியில் திகழும் அதிகார அமைப்பான திறன்களை மேம்படுத்துவதை இலக்காக கொண்ட சான்றளிப்பை அறிமுகம் செய்திருந்தது.

அஷ்ரப் ஏ சமத்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division